பிப்ரவரியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள், ஹீரோ மோட்டோகார்ப்-ஐ முந்தியது. டிவிஎஸ் மோட்டார்சைக்கிள் வளர்ச்சியும் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி அதிகரிச்சது டிவிஎஸ்-க்கு லாபம்.
நாட்டில் ஆட்டோமொபைல் துறையில் பிப்ரவரி மாதம் செம ட்விஸ்ட்டா இருந்துச்சு. ஒரு பக்கம் மாருதி சுஸுகி ஃபிராங்க்ஸ் கார் சந்தையில் பெரிய கலக்கு கலக்கிடுச்சி. நம்பர் ஒன் கார் ஃபிராங்க்ஸ் தான். இன்னொரு பக்கம் டூவீலர்லயும் பெரிய சேஞ்ச். ஹீரோ மோட்டோகார்ப் தான் டூவீலர்ல நம்பர் ஒன்னா இருந்தாங்க. ஆனா இப்போ அந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது. ஹீரோ டாப்ல இருந்து கீழ வந்துட்டாங்க. கடந்த மாதம் ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா, டிவிஎஸ் மோட்டார்ஸ் வேற லெவல்ல இருந்தாங்க.
2025 பிப்ரவரியில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர் இந்தியா மொத்தம் 422,449 வாகனங்களை விற்றன. வருடத்திற்கு கொஞ்சம் கம்மியா இருந்தாலும் விற்பனையில் நம்பர் ஒன். அதே நேரத்தில் டிவிஎஸ் மோட்டார் 2025 பிப்ரவரியில் மொத்தம் 403,976 வாகனங்களை விற்றது. இது கடந்த வருடத்தை விட 9.6% அதிகம். ஆனால் ஹீரோ மோட்டோகார்ப் 388,068 வாகனத்தைத் தான் விற்றார்கள். இது கடந்த வருடத்தை விட 17.2% குறைவு. பஜாஜ் ஆட்டோ 299,418 வாகனங்கள விற்றது. இது கடந்த வருடத்தை விட 1.6% அதிகம்.
போன வருஷம் மொத்த விற்பனையில ஹோண்டா மோட்டார்சைக்கிள் அண்ட் ஸ்கூட்டர், ஹீரோ மோட்டோகார்ப்-க்கு செம அடி கொடுத்தாங்க. ஹோண்டா 54,04,216 வண்டி (விற்பனை + ஏற்றுமதி) வித்தாங்க. ஹீரோ மோட்டோகார்ப் ஏற்றுமதி, விற்பனை சேர்த்து 53,49,583 வண்டி தான் வித்தாங்க. உள்ளூர் விற்பனையில ஹீரோ கொஞ்சம் அதிகமா வித்தாலும், ஹோண்டா ஏற்றுமதியில 478975 வண்டி வித்து ஹீரோவை முந்திட்டாங்க.
டிவிஎஸ் நிறுவனம், ஹீரோ மோட்டோகார்ப்-ஐ முந்துவது இதுதான் முதல் முறை. என்டார்க் ஸ்கூட்டர், அப்பாச்சி பைக் தயாரிப்பாளரான டிவிஎஸ் ஹீரோவை முந்திவிட்டது. சென்னையில் உள்ள டிவிஎஸ் நிறுவனம் இருசக்கர வாகன உலகில் வேகமாக வளரக்கூடிய வாகனமாக உள்ளது. பிப்ரவரியில் டிவிஎஸ் ஏற்றுமதி 26% அதிகமா 124,993 வண்டியா இருந்தது. கடந்த வருடம் இதே நேரத்தில் 98,856 வாகனம் தான் ஏற்றுமதி ஆனது.
