புதிய மிட் லெவல் எஸ்யுவி காரை அறிமுகம் செய்யும் ஹோண்டா நிறுவனம்… அதன் பெயர் மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
ஹோண்டா கார் நிறுவனம் தனது புதிய மிட் லெவல் எஸ்யுவி காரை, இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஹோண்டா அறிமுகம் செய்யவுள்ள எஸ்யுவி காருக்கு எலிவேட் என பெயரிடப்பட்டுள்ளது.
ஹோண்டா கார் நிறுவனம் தனது புதிய மிட் லெவல் எஸ்யுவி காரை, இந்தியாவில் மிக விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. ஹோண்டா அறிமுகம் செய்யவுள்ள எஸ்யுவி காருக்கு எலிவேட் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பெயரை நிறுவனம் கடந்த 2021 ஆம் ஆண்டு முன்பதிவு செய்து உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. அதன்படி தற்போது ஹோண்டாவின் எஸ்யுவி காருக்கு எலிவேட் என பெயரிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த காரின் சிறப்பம்சங்கள் கார் பிரியர்களை வெகுவாக கவரும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: இந்தியாவில் அறிமுகமானது சிட்ரோயன் நிறுவனத்தின் c3 ஏர்கிராஸ் கார்... வியக்க வைக்கும் சிறப்பம்சங்கள்!!
இந்த கார் ஹோண்டா சிட்டி காரை போலேதான் எலிவேட் காரும் கட்டமைக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. எஞ்சினை பொறுத்தவரை 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படவுள்ளது. இதில் ஹைப்ரிட் இன்ஜின் ஆப்ஷனும், ஹோண்டா எலிவேட் காரில் வழங்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹோண்டா சிட்டி ஹைப்ரிட் காரில் இடம்பெற்றுள்ள அதே இன்ஜின்தான், ஹோண்டா எலிவேட் காரிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 2 லட்சம் பேரிடம் 15,000 கோடி அபேஸ்! மெகா பைக் பாட் மோசடியில் முக்கிய குற்றவாளியை பிடிப்பவருக்கு ரூ.5 லட்சம்!
இந்த கார் லிட்டருக்கு 26.5 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த எலிவேட் காரின் விலை இந்திய சந்தையில் ரூ.12 லட்சம் முதல் ரூ.19 லட்சம் வரை நிர்ணயிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல், இந்த காரில், அடாஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோ கிளைமேட் கண்ட்ரோல் ஆகியவற்றோடு, பாதுகாப்பை உறுதி செய்யும் வகையயில் ரியர் வியூ கேமரா, ஏபிஎஸ், ஏபிடி மற்றும் மல்டிபிள் ஏர்-பேக்ஸ் என பல்வேறு சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன.