மணிக்கு 322 கிமீ வேகம்.... அதிரடியாய் உருவாகும் ஹெனசி ஹைப்பர்கார்...!
புதிய ஹெனசி பிராஜக்ட் டீப்-ஸ்பேஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 1000 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.
அமெரிக்க நாட்டின் டெக்சாசை சேர்ந்த ஹெனசி நிறுவனம் புதிதாக எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் ஒன்றை உருவாக்கி வருவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த கார் பிராஜக்ட் டீப் ஸ்பேஸ் எனும் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த எலெக்ட்ரிக் ஹைப்பர்கார் மாடல் டீப்-ஸ்பேஸ் என்றே அழைக்கப்பட இருக்கிறது.
இதையும் படியுங்கள்: 780 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் புது எலெக்ட்ரிக் கார் - இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய மெர்சிடிஸ் பென்ஸ்..!
புதிய டீப்-ஸ்பேஸ் மாடலில் மொத்தம் ஆறு வீல்கள் வழங்கப்பட உள்ளன. இந்த ஹைப்பர்காரின் உற்பத்தி 2026 ஆம் ஆண்டு தான் துவங்க இருக்கிறது. தற்போதைய கணிப்பின் படி டீப் ஸ்பேஸ் மாடலின் விலை இந்திய மதிப்பில் ரூ. 237 கோடியே 5 லடசத்து 26 ஆயிரத்து 917 வரை நிர்ணயம் செய்யப்படலாம். இதே தகவலை ஹெனசி நிறுவனமும் ஏற்கனவே அறிவித்து விட்டது.
இதையும் படியுங்கள்: விற்பனையில் திடீர் சரிவு... நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் - என்ன காரணம் தெரியுமா?
ரேன்ஜ் விவரங்கள்:
புதிய ஹெனசி பிராஜக்ட் டீப்-ஸ்பேஸ் மாடல் முழு சார்ஜ் செய்தால் 1000 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்கும் என ஹெனசி நிறுவனத்தின் சி.இ.ஒ. ஜான் ஹெனசி தெரிவித்து உள்ளார். ஆயிரம் கிலோ மீட்டர்கள் ரேன்ஜ் வழங்கும் என்பதால் இந்த காரில் பெரிய பேட்டரி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். பெரிய பேட்டரி காரணமாக இந்த காரின் எடை அதிகமாக இருக்கும்.
இதையும் படியுங்கள்: இந்திய விற்பனையில் மாஸ் காட்டிய டாப் 5 கார்கள்... எந்தெந்த மாடல்கள் தெரியுமா?
இதுவரை ஹெனசி வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி இந்த ஹைப்பர்கார் மணிக்கு 322 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டு இருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஹைப்பர் காரில் வழங்கப்பட்டு இருக்கும் ஆறு எலெக்ட்ரிக் மோட்டார்கள் அதிகபட்சம் 2400 ஹெச்.பி. வரையிலான திறன் வழங்குகிறது.
ஆடம்பர அம்சங்கள்:
அதிவேகமாக செல்லும் திறன் மட்டும் இன்றி இதன் இண்டீரியர் அதிக ஆடம்பர வசதிகளை கொண்டிருக்கும் என ஹெனசி முடிவு செய்து அதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருகிறது. இண்டீரியரை பொருத்தவரை தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஆடம்பர கார்களுக்கு சவால் விடும் வகையில், இந்த மாடலின் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
சர்வதேச சந்தையில் ஹெனசி டீப்-ஸ்பேஸ் மாடல் மொத்தத்தில் 105 யூனிட்கள் தான் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது. இதன் ப்ரோடோடைப் மாடல் 2025 ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு, உற்பத்தி வெர்ஷன் 2026 வாக்கில் வெளியாக இருக்கிறது. இந்த காரின் முதல் யூணிட் வாங்க ஏற்கனவே ஒரு வாடிக்கையாளர் முன்பதிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.