விற்பனையில் திடீர் சரிவு... நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்ட ஓலா எலெக்ட்ரிக் - என்ன காரணம் தெரியுமா?
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் S1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுடன் களமிறங்கியது.
ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய எலெக்ட்ரிக் வாகன சந்தையில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. ஜூன் 2022 மாதத்தில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மொத்தம் 5 ஆயிரத்து 753 யூனிட்களை விற்பனை செய்து உள்ளது. ஜூன் மாத விற்பனையின் படி ஒகினவா, ஆம்பியர் மற்றும் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனங்கள் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தை முந்தி உள்ளன. இரண்டு மாதங்கள் விற்பனை சரிவடைந்த நிலையில், கடந்த மாதம் ஹீரோ எலெக்ட்ரிக் வாகன விற்பனை அதிகரித்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: இந்திய விற்பனையில் மாஸ் காட்டிய டாப் 5 கார்கள்... எந்தெந்த மாடல்கள் தெரியுமா?
எலெக்ட்ரிக் வாகன சந்தையில் S1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுடன் களமிறங்கிய ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம், இந்திய விற்பனையில் அதிக வரவேற்பு கிடைத்து இருப்பதாக அந்நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில், கடந்த மாதம் முன்பதிவுகள் அடிப்படையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் பின்னடவை சந்தித்து இருப்பது தெரிய வந்துள்ளது. ஏப்ரல் மாத விற்பனையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் முதலிடத்தில் இருந்தது.
இதையும் படியுங்கள்: குட்டி 'பிரேக்' போதும்.. சார்ஜ் ஏறிடும்.. நாட்டின் அதிவேக பாஸ்ட் சார்ஜரை இன்ஸ்டால் செய்த கியா..!
இதைத் தொடர்ந்து மே மாத விற்பனையில் ஒகினவா நிறுவனம் முதலிடம் பிடித்தது. இந்த நிலையில், ஜூன் மாத விற்பனையில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. ஓலா நிறுவன ஸ்கூட்டர் மாடல்களின் முன்பதிவு 33 சதவீதம் குறைந்து இருக்கிறது. மே மாத கடைசி தினம் மற்றும் ஜூன் மாதத்தின் கடை நாள் முன்பதிவை ஒப்பிட்டதில் இது தெரியவந்துள்ளது.
இதையும் படியுங்கள்: 418 கிமீ ரேன்ஜ் கொண்ட எலெக்ட்ரிக் கார்... இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்திய வால்வோ...!
வினியோக பிரச்சினை:
“உதிரி பாகங்கள், அதாவது செல் குறைபாடு காரணமாக ஜூன் மாத தாக்கத்தை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம். இந்த மாதத்தில் எங்களின் வாடிக்கையாளர் சேவையை சிறப்பாக மேம்படுத்துவதில் கவனம் செலுத்த இருக்கிறோம். ஜூலை மாதத்தில் எங்களது வினியோகம் சார்ந்த பிரச்சினைகள் தீர்ந்து, மீண்டும் விற்பனை அதிகரிக்கும் என நம்புகிறோம்,” என்று ஓலா எலெக்ட்ரிக் நிறுவன செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார்.
இந்திய சந்தையில் எலெக்ட்ரிக் வாகன விற்பனை ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சரிவடைந்த நிலையில், ஜூன் மாத விற்பனை சற்றே அதிகரித்து இருக்கிறது. ஜூன் மாதம் மட்டும் 32 ஆயிரத்து 807 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இதில் பஜாஜ் ஆட்டோ மர்றும் டி.வி.எஸ். நிறுவன யூனிட்கள் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அசுர வளர்ச்சி:
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவன முன்பதிவுகள் ஜூன் மாதத்தில் மட்டும் முன்று மடங்கு அதிகரித்து இருக்கிறது. மே மாதத்தில் 2 ஆயிரத்து 739 யூனிட்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், ஜூன் மாதத்தில் இந்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 049 யூனிட்களாக அதிகரித்து உள்ளது. இது தவிர ஆம்பியர் நிறுவனத்தின் முன்பதிவுகளும் ஜூன் மாதத்தில் அதிகரித்து இருக்கிறது. ஜூன் மாதத்தில் ஆம்பியர் நிறுவன வாகனங்களை வாங்க 6 ஆயிரத்து 199 பேர் முன்பதிவு செய்து இருக்கின்றனர்.
ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் முன்பதிவுகள் மே மாதத்துடன் ஒப்பிடும் போது 18 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. ரெவோல்ட் நிறுவன முன்பதிவுகளும் அதிகரித்து இருக்கிறது. இந்த நிறுவன வாகனங்களை வாங்க 2 ஆயிரத்து 232 பேர் முன்பதிவு செய்து உள்ளனர். ஜூன் மாத விற்பனையில் ஒகினவா நிறுவனம் முதலிடத்தில் இருந்த போதிலும், இதன் வஇற்பனை 24 சதவீதம் சரிவடைந்து இருக்கிறது.