Asianet News TamilAsianet News Tamil

எலெக்ட்ரிக் கார் ஓனர்களுக்கு குட் நியூஸ்! புதிதாக 5,000 சார்ஜிங் மையங்களை அமைக்கும் டாப் நிறுவனங்கள்!

இது குறித்து ஸ்டாடிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகவ் அரோரா கூறுகையில், "எங்கள் கூட்டு முயற்சிகளின் மூலம், 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் 7,000 சார்ஜர்களைக் கொண்ட எங்களது தற்போதைய நெட்வொர்க்கை 20,000 ஆக உயர்த்த இலக்கு வைத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Good news for EV owners: Statiq, Hyundai, ChargeMOD, GLIDA to set up 5,000 chargers sgb
Author
First Published Jun 13, 2024, 7:07 PM IST

ஹூண்டாய், சார்ஜ் எம்.ஓ.டி., கிளிடா, ஸ்டாடிக் உள்ளிட்ட சார்ஜ் பாயிண்ட் ஆபரேட்டர்கள் ஒன்றிணைந்து அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 5,000 புதிய மின்சார வாகன சார்ஜர்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.

இந்த விரிவாக்கம், ஸ்டாடிக் ஆப் மூலம் மின்சார வாகன பயனர்களுக்கு மேம்பட்ட சார்ஜிங் அனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மொபைல் அப்ளிகேஷன் எலெக்ட்ரிக் வாகன உரிமையாளர்கள் சார்ஜிங் மையங்களைக் கண்டறிதல், சார்ஜிங் மையத்திற்கு வழிகாட்டுதல் மற்றும் பரிவர்த்தனைகளை நிர்வகித்தல் ஆகிய அனைத்தையும் ஒருங்கிணைக்க உதவும்.

இந்தியாவில் மின்சார வாகன பஇயன்பாட்டு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. இதனால், வலுவான மற்றும் எளிதாக அணுகக்கூடிய சார்ஜிங் மையங்கள் முக்கியமான தேவையாக உள்ளன. இதனால், ஹூண்டாய், சார்ஜ் எம்.ஓ.டி. (ChargeMOD) ​மற்றும் கிளிடா (GLIDA) ஆகிய நிறுவனங்களுடன் ஸ்டாடிக் கூட்டணி அமைக்க முடிவு செய்திருக்கிறது.

இந்த நிறுவனங்களின் அனைத்து சார்ஜிங் நிலையங்களையும் ஸ்டாடிக் மொபைல் செயலி மூலம் ஒருங்கிணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த முயற்சியின் விளைவாக, EV பயனர்கள் பரந்த சார்ஜர் நெட்வொர்க்கை எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று ஸ்டாடிக் கருதுகிறது.

இது குறித்து ஸ்டாடிக் நிறுவனத்தின் இணை நிறுவனர் ராகவ் அரோரா கூறுகையில், "எங்கள் கூட்டு முயற்சிகளின் மூலம், 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் 7,000 சார்ஜர்களைக் கொண்ட எங்களது தற்போதைய நெட்வொர்க்கை 20,000 ஆக உயர்த்த இலக்கு வைத்திருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார். இப்போது, 1.5 லட்சம் மின்சார வாகன பயனர்களுக்கு சேவை அளித்து வருவதாகவும் இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் எலக்ட்ரிக் வாகன விற்பனை வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனப் பிரிவில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பெரிய டிமாண்ட் உருவாகியுள்ளது. 2023ஆம் ஆண்டில், இந்தியாவில் மொத்த மின்சார வாகன விற்பனை 15.3 லட்சத்தை எட்டியது. இது 2022 இல் 10.2 லட்சமாக இருந்தது. இது இந்தியாவில் EV பயன்பாட்டில் ஏற்பட்டுவரும் வலுவான வளர்ச்சிப் பாதையைக் காட்டுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios