Ford : மீண்டும் இந்திய சந்தையை மிரட்ட வரும் Ford Endeavour.. ஆனால் வேற பெயரில் - என்ன காரணம்? முழு விவரம்!

Ford Endeavour : பிரபல Ford நிறுவனம், இந்தியாவில் மக்களால் விரும்பப்பட்ட மிகவும் சிறந்த கார் பிராண்டுகளில் ஒன்றாகும். இந்நிலையில் ஒரு புதிய காரை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்கின்றது Ford.

Ford may launch its new ford Everest soon in india see spec and expected price ans

கடந்த 2003 மற்றும் 2006ம் ஆண்டுக்குள் இந்திய சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற காராக மாறியது போர்ட் நிறுவனத்தின் எண்டோவர். ஒரு எஸ்யூவி வகை வாகனத்திற்கு பெரிய அளவிலான வரவேற்பு இந்தியாவில் கிடைத்தது அது முதல் முறை என்று கூறலாம், அந்த அளவிற்கு Ford நிறுவனத்தின் Endeavour மிகப்பெரிய அளவில் பிரபலமானது. 

டாடா நிறுவனத்தின் சியரா காருக்கு பிறகு இந்தியர்களால் அதிகம் விரும்பப்பட்ட ஒரு காராகவும் அது மாறியது Endeavour. இந்நிலையில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து தற்பொழுது Ford நிறுவனம் ஒரு புதிய முயற்சியை எடுத்து இருக்கிறது. எதிர்வரும் 2025 ஆம் ஆண்டுக்குள் தனது போர்டு Endeavourரை மீண்டும் இந்திய சந்தையில் அது வெளியிட இருக்கின்றது. ஆனால் இம்முறை அதே பெயரோடு வெளியிடாமல் போர்ட் எவரெஸ்ட் என்கின்ற பெயரில் இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகம் ஆகும்.

40 ஆயிரம் கூட வேண்டாம் பாஸ்.. நெக்ஸ்ஜென் எனர்ஜியா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை ரொம்ப கம்மி தான்..

இந்த புதிய Everest கார் ஒரு CBU ஆகக் கொண்டு வரப்படும். CUB என்றால் Completely Built Unit எனப்படும், அதாவது இந்த கார் விற்பனையாகும் நாட்டில் கட்டமைக்கப்படாமல், முற்றிலும் இறக்குமதி செய்யப்படும் காரக இருக்கும். இந்தியாவில் ஒரு பெரிய டீசல் V6 என்ஜினை இது பெறலாம். மேலும் 10-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் வகையாகவும் இருக்கலாம்.

ஃபோர்டு இந்தியாவில் மீண்டும் நுழைவதற்கான தனது திட்டங்களை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், CBU ஃபோர்டு எவரெஸ்ட் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டளவில் உள்ளூர் உற்பத்தி தொடங்கும் என்றும், எவரெஸ்ட் விலை ரூ.60 லட்சம் முதல் ரூ.70 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒருமுறை சார்ஜ் செய்தால் குடும்பத்தோடு 113 கிமீ வரை ரைடு போகலாம்.. விலை ரூ.80 ஆயிரம் தான்..

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios