பிப்ரவரிக்குப் பிறகு பேடிஎம் FASTag வேலை செய்யுமா? KYC பதிவுக்கு அவகாசம் இருக்கா?

பிப்ரவரி 2024 இறுதி வரை, பேடிஎம் (PayTM) பயனர்கள் தங்கள் FASTags இன்னும் டாப் அப் செய்யலாம். பிப்ரவரி 29ஆம் தேதிக்குப் பிறகும் அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் பேலன்ஸ் முடிந்ததும், பேடிஎம் FASTag ஐ ரீசார்ஜ் செய்ய முடியாது. டோல்களில் பணம் செலுத்தவும் பயன்படுத்த முடியாது.

FASTag Paytm and KYC Deadlines Explained: Will My FASTag Still Work After February 2024? sgb

FASTag முறையில் சுங்கக் கட்டணம் செலுத்துவதற்கு KYC தகவல்களைப் பதிவு செய்திருக்க வேண்டும் என இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) கூறியுள்ளது. FASTag உடன் முழுமையான KYC விவரங்களைப் பதிவு செய்ய காலக்கெடுவை விதித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) பேடிஎம் பேமெண்ட் வங்கியை மூட உத்தரவிட்டுள்ளது. இதனால், பேடிஎம் FASTag சேவை பாதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இவை குறித்து இந்தத் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்.

சுங்கச்சாவடி வசூல் மற்றும் தாமதங்களைக் குறைக்கும் முயற்சியாக நெடுஞ்சாலை ஆசையம் சமீபத்தில் "ஒரு வாகனம், ஒரு FASTag" என்ற திட்டத்தை அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக, ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி வாகன உரிமையாளர்கள் தங்கள் FASTagகளுக்கான KYC களை முடிக்குமாறு நெடுஞ்சாலை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதற்கான காலக்கெடு ஜனவரி 31 வரை அளிக்கப்பட்டது. ஆனால் பின்னர் பிப்ரவரி 29 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரிக் வாகன பேட்டரிகளை மறுசுழற்சி செய்ய கைகோர்க்கும் ஒமேகா செய்கி, அட்டேரோ

ஒரு வாகனத்திற்கு பல FASTagகள் வழங்கப்பட்டது, ஒரு FASTag பல வாகனங்களால் பயன்படுத்தப்பட்டது என பல வழக்குகள் வந்திருப்பதைக் கருத்தில் கொண்டு KYC தகவல்களை முழுமையாகப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்கியுள்ளது. ஒவ்வொரு வாகனத்திற்கு ஒரு FASTag மட்டுமே பதிவு செய்யப்படும் எனவும் கூறியுள்ளது.

KYC பதிவு செய்யவில்லை என்றால் என்ன செய்வது?

KYC விவரங்களை கொடுக்கப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் முடிக்கவில்லை என்றால், உங்கள் வாகனத்தின் FASTag செயலிழக்கப்படும். பயன்படுத்தப்படாத பேலன்ஸ் இருந்தாலும் கூட காலாவதி ஆகிவிடும். மேலும், உங்கள் வாகனத்தில் பல FASTagகள் பதிவுசெய்யப்பட்டிருந்தால், சமீபத்தில் வாங்கியது மட்டுமே செயலில் இருக்கும். மற்றவை பிளாக் செய்யப்படும்.

எனவே வாகன உரிமையாளர்கள் இப்போது செய்யவேண்டிய விஷயம், FASTag க்கு KYC தகவல்களைப் பதிவுசெய்வதுதான். இது ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் செய்யலாம். ஒரு நபர் ஒரே ஒரு FASTag மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அல்லது FASTag வழங்கிய வங்கி இணையதளத்தில் உங்கள் FASTag KYC ஸ்டேட்டஸை சரிபார்க்கலாம்.

2024இல் ரிலீசுக்கு ரெடியாக இருக்கும் புதிய எலக்ட்ரிக் கார்கள்... வெயிட்டிங்கில் இருக்கும் கார் பிரியர்கள்!

FASTag Paytm and KYC Deadlines Explained: Will My FASTag Still Work After February 2024? sgb

பேடிஎம் பேமெண்ட் வங்கிக்கு நெருக்கடி:

சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) முறைகேடுகள் காரணமாக அதன் பேமெண்ட் வங்கியை மூடுமாறும், பிப்ரவரி 29க்குப் பிறகு ஏற்கனவே உள்ள கணக்குகள் மற்றும் வாலட்களில் புதிய டெபாசிட்களை ஏற்றுக்கொள்வதை நிறுத்துமாறும் கேட்டுக்கொண்டது, இதில் PayTM வழங்கிய FASTags அடங்கும். அபராதம் இல்லாமல் கட்டணம் செலுத்துவதற்கு FASTags கட்டாயமாகிவிட்டதால், RFID குறிச்சொல்லை வழங்கும் மிகவும் பிரபலமான சேவைகளில் PayTM ஒன்றாகும், எனவே இந்த சமீபத்திய வளர்ச்சியானது ஏராளமான மக்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்தலாம். 

பிப்ரவரிக்குப் பிறகு...

பிப்ரவரி 2024 இறுதி வரை, பேடிஎம் (PayTM) பயனர்கள் தங்கள் FASTags இன்னும் டாப் அப் செய்யலாம். பிப்ரவரி 29ஆம் தேதிக்குப் பிறகும் அவற்றைப் பயன்படுத்தலாம். ஆனால் பேலன்ஸ் முடிந்ததும், பேடிஎம் FASTag ஐ ரீசார்ஜ் செய்ய முடியாது. டோல்களில் பணம் செலுத்தவும் பயன்படுத்த முடியாது.

பல ஸ்டார்ட்அப்களின் சி.இ.ஓ.க்கள் பேடிஎம் மீது ஆர்பிஐ எடுத்துள்ள நடவடிக்கையைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தியுள்ளனர். இருப்பினும் ஆனால், ரிசர்வ் வங்கி தனது முடிவைத் அதை திரும்பப் பெறுமா என்பது பற்றி தகவல் ஏதும் இல்லை.

கார்களை கிஃப்ட் செய்த ஐடி நிறுவனம்! இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்த ஊழியர்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios