Asianet News TamilAsianet News Tamil

BMW : 2 நாள் தான் இருக்கு.. இந்தியாவிற்கு வரும் BMW r 1300 GS.. அசத்தலான ADV பைக்.. விலை எவ்வளவு இருக்கும்?

BMW R 1300 GS : பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிரபல BMW நிறுவனத்தின் புதிய R 1300 GS இப்பொது இந்தியாவிலும் அறிமுகமாகவுள்ளது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.

BMW launching new bmw r 1300 gs adv bike in india see full spec and expected price ans
Author
First Published Jun 10, 2024, 6:04 PM IST

BMW R 1300 GS வரும் ஜூன் மாதம் 13ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சந்தேகத்திற்கு இடமின்றி BMWன், இந்த ஆண்டின் மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றான '1300'ன் வெளியீட்டுக்கு அருமையான நாளை BMW தேர்ந்தெடுத்துள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவில் உள்ள ADV எனப்படும் Adventure ரக பைக் ரசிகர்கள் இப்பொது மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் என்றே கூறலாம்.

இந்த புதிய BMW 1300 GS ஆனது, இதற்கு முன்பு வெளியான BMW R 1250 GS அளவுள்ள எரிபொருள் டேங்க் அமைப்பை கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘1250’ இந்தியாவிலும் வெளிநாட்டிலும் மிகவும் பிரபலமான மாடலாக இருந்தது. சாகச மோட்டார்சைக்கிள் வாங்குபவர்களுக்கு இதன் பல்துறைத்திறன் மற்றும் நடைமுறைத்திறன் மிகவும் பிடித்தது, அந்த அளவிக்ரு இந்த புதிய 1300 ரசிகர்களின் ஆர்வத்தை நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

அதிரி புதிரி சேல்ஸ்... கார் பிரியர்களைக் கவர்ந்த டாப் 5 எஸ்.யூ.வி. கார்கள்!

பிஎம்டபிள்யூ ஆர் 1300 ஜிஎஸ் அதன் முன்னோடியின் அதே ஒல்லியான தோற்றத்தை கொண்டுள்ளது. வழக்கமான BMW 'GS' போலவே தோற்றமளிக்கிறது என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். பைக்கை இயக்கும் புதிய 1,300சிசி, இரட்டை சிலிண்டர் எஞ்சின் 7,750ஆர்பிஎம்மில் 145பிஎச்பி பவரையும், 6,500ஆர்பிஎம்மில் 149என்எம் ஆற்றலையும் இது வழங்கும். 

இது ஆறு வேக கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இன்ஜின் R1 250 GS-ஐ விட பெரியதாக இருந்தாலும், இது மிகவும் கச்சிதமானது, இது இயந்திரத்தின் கீழ் கியர்பாக்ஸை வைப்பதன் மூலம் அடையப்பட்டது என்று BMW கூறுகிறது. ஏற்கனவே இந்த வண்டிக்கான முன்பதிவுகள் திறக்கப்பட்டுள்ளன, மேலும் BMW R 1300 GS, இந்தியாவில் ரூ. 22 லட்சத்தில் இருந்து ரூ. 23 லட்சம் வரை விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த பைக் Ducati Multistrada V4, Harley-Davidson Pan America 1250 மற்றும் Triumph Tiger 1200 ஆகிய மாடல்களுக்கு நிச்சயம் பொடியாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

Ola S1X Vs Bajaj Chetak 2901 : ஓலா? பஜாஜ் சேடக்? இதில் எந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்.?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios