Asianet News TamilAsianet News Tamil

ரூ. 2.85 லட்சம் விலையில் புது பி.எம்.டபிள்யூ. பைக் அறிமுகம்... என்னென்ன ஸ்பெஷல் தெரியுமா?

டிவிஎஸ் அபாச்சி RR 310 மாடலின் சிப்லிங் போன்று பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

BMW G 310 RR Launched In India Price Specs and More
Author
Chennai, First Published Jul 15, 2022, 3:09 PM IST

பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடல் இந்திய  சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலின் விலை ரூ. 2 லட்சத்து 85 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் ஸ்டைல் ஸ்போர்ட் வேரியண்ட் விலை ரூ. 2 லட்சத்து 99 ஆிரம், எக்ஸ்-ஷோரூம் ஆகும். இது பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் மூன்றாவது 310 சீரிஸ் மாடல் ஆகும். முன்னதாக பி.எம்.டபிள்யூ. G 310 R மற்றும் G 310 GS அட்வென்ச்சர் டூரர் என இரு மாடல்களை விற்பனை செய்து வருகிறது.

இதையும் படியுங்கள்: முழு சார்ஜில் 300 கி.மீ. ரேன்ஜ்... மாஸ் காட்டி அசத்திய ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர்...!

புதிய பி.எம்.டபிள்யூ. G 310 RR வாங்குவோர் மாதம் ரூ. 3 ஆயிரத்து 999 எனும் மாத தவணையில் பணம் செலுத்திக் கொள்ளலாம். இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. பி.எம்.டபிள்யூ.  G 310 RR மாடல் டி.வி.எஸ். அபாச்சி RR 310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் இந்த மாடலுக்கு காஸ்மெடிக் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. இந்த மாடல் பி.எம்.டபிள்யூ. பாரம்பரிய நிறங்கள் மற்றும் கிராபிக்ஸ் கொண்டுள்ளது.

இதையும் படியுங்கள்: ரூ. 94 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரெனால்ட்..!

பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் ஸ்ப்லிட் ஹெட்லேம்ப் செட்-அப் உள்ளது. பின்புறம் புல் ஹாரன் ஸ்டைல் எல்.இ.டி. எலிமண்ட்கள் உள்ளன. இத்துடன் செங்குத்தாக பொருத்தப்பட்ட 5 இன்ச் TFT இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் உள்ளது. இதில் மேம்பட்ட ஓ.எஸ்., ப்ளூடூத் கனெக்டிவிட்டி, BI-எல்.இ.டி.  ட்வின் ப்ரோஜெக்டர் ஹெட்லைட், டெயில் லைட், மிரர்கள், கோல்டன் யு.எஸ்.டி. ஃபோர்க் மற்றும் விண்ட் ஸ்கிரீன் உள்ளிட்டவை டி.வி.எஸ்.  மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

BMW G 310 RR Launched In India Price Specs and More

இதையும் படியுங்கள்: இணையத்தில் லீக் ஆன மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா வேரியண்ட் விவரங்கள்!

பவர்டிரெயினை பொருத்தவரை பி.எம்.டபிள்யூ. G 310 RR மாடலில் 313சிசி, சிங்கில் சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 34 ஹெச்.பி. பவர், 27 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் ரைடு மோட்கள் மற்றும் டூயல் சேனல் ஏ.பி.எஸ். போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன. 

முன்னதாக பி.எம்.டபிள்யூ.  நிறுவனம் 2022 G 310 R மற்றும் G310 GS மாடல்களை அப்டேட் செய்து 2022 மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த மாடல்களில் மைனர் அப்டேட் செய்யப்பட்டு சிறு மாற்றங்களுடன் விற்பனைக்கு வந்து இருக்கின்றன. 

Follow Us:
Download App:
  • android
  • ios