முழு சார்ஜில் 300 கி.மீ. ரேன்ஜ்... மாஸ் காட்டி அசத்திய ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர்...!
ஓலா நிறுவனத்தின் S1 சீரிஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது முதல் பல்வேறு சர்ச்சைகளை எதிர்கொண்டு வருகிறது.
ஓலா S1 ப்ரோ மாடல் அதிக ரேன்ஜ் வழங்குவதை எடுத்துக் காட்டும் மற்றொரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் முழு சார்ஜ் செய்தால் 300 கி.மீ. வரையிலான ரேன்ஜ் வழங்குவதாக இருவர் தங்களின் ட்விட்டரில் தெரிவித்து உள்ளனர். முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது S1 சீரிஸ் மாடல்களுக்கு புதிய மூவ் ஓ.எஸ். 2 அப்டேட் வழங்கியது. இந்த அப்டேட்டை தொடர்ந்து ஸ்கூட்டரில் உள்ள புது இகோ மோட் பயன்படுத்தியதில் இத்தனை கி.மீ. ரேன்ஜ் கிடைத்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: ரூ. 94 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரெனால்ட்..!
சத்யேந்திர யாதவ் என்ற வாடிக்கையாளர் தனது ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஐந்து சதவீதம் சார்ஜ் மீதம் இருக்கும் நிலையில், 300 கி.மீ. வரை பயணம் செய்ததாக தனது ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார். இவரது ஸ்கூட்டர் டேஷ்போர்டு விவரங்கள் ஆய்வு செய்ததில், சத்யேந்தர யாதவ் தனது ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டரை மணிக்கு 20 கி.மீ. எனும் சராசரி வேகத்தில் இயக்கி இருப்பது தெரிய வந்தது.
இதையும் படியுங்கள்: இணையத்தில் லீக் ஆன மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா வேரியண்ட் விவரங்கள்!
இதன் காரணமாகத் தான் ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டர் 300 கி.மீ. ரேன்ஜ் வழங்கி இருக்கிறது. இந்த பயணத்தின் போது சத்யேந்திர யாதவ் தனது ஓலா S1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகபட்சமாக மணிக்கு 38 கி.மீ வேகத்தில் தான் சென்று இருக்கிறார்.
இதையும் படியுங்கள்: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 800 சதவீத வளர்ச்சி... மாஸ் காட்டிய இந்திய நிறுவனம்..!
சத்யேந்தர யாதவ் போன்றே மற்றொரு பயனரும் தனது ஸ்கூட்டர் அதிக ரேன்ஜ் கொடுத்ததாக தெரிவித்து இருக்கிறார். இவர் தனது ஓலா S1 ப்ரோ ஸ்கூட்டரில் நான்கு சதவீதம் சார்ஜ் மீதம் இருந்த போது 303 கி.மீ. வரை பயணம் செய்தாத தெரிவித்து உள்ளார். இவரின் டேஷ்போர்டு விவரங்களில், ஸ்கூட்டர் மணிக்கு 23 கி.மீ. எனும் சராசரி வேகத்தில் இயக்கப்பட்டு இருக்கிறது.
இவர் அதிகபட்சமாக தனது ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மணிக்கு 40 கி.மீ. வேகத்திலேயே இயக்கி இருக்கிறார். முன்னதாக ஓலா எலெக்ட்ரிக் நிறுவன தலைமை செயல் அதிகாரி பாவிஷ் அகர்வால், ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை கொண்டு 200 கி.மீ. ரேன்ஜ் வரை பயணம் செய்து அசத்திய வாடிக்கையாளர்களுக்கு லிமிடெட் எடிஷன் குயெரா ஓலா S1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் யூனிட்களை பரிசாக வழங்கி இருந்தார்.
அந்த வகையில் தற்போது 300 கி.மீ. வரையிலான ரேன்ஜ் எட்டி இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இதே போன்று பரிசை ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் வழங்குமா என்ற எதிர்பார்ப்பு நெட்டிசன்கள் மத்தியில் எழுந்து உள்ளது.