இணையத்தில் லீக் ஆன மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா வேரியண்ட் விவரங்கள்!

மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய கிராண்ட் விட்டாரா எஸ்.யு.வி. மாடலை அடுத்த வாரம் அறிமுகம் செய்கிறது.

Maruti Suzuki Grand Vitara variant details revealed bookings open

மாருதி சுசுகி நிறுவனம் புதிய கிராண்ட் விட்டாரா மாடலுக்கான டீசரை வெளியிட்டு முன்பதிவுகளையும் துவங்கி விட்டது. இந்திய சந்தையில், புதிய கிராண்ட் விட்டாரா மாடல் ஜூலை 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்திய சந்தையில் ஹூண்டாய் கிரெட்டா மாடலுக்கு போட்டியாக புதிய மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா அறிமுகமாகிறது. அடுத்த வாரம் அறிமுகமாகும் கிராண்ட் விட்டாரா விலை விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படலாம். 

இதையும் படியுங்கள்: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 800 சதவீத வளர்ச்சி... மாஸ் காட்டிய இந்திய நிறுவனம்..!

புதிய கிராண்ட் விட்டாரா மாடலுக்கான முன்பதிவு துவங்கி உள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் ரூ. 11 ஆயிரம் செலுத்தி புதிய  காரை வாங்க முன்பதிவு செய்யலாம். மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் ஹைப்ரிட் மற்றும் இண்டெலிஜண்ட் எலெக்ட்ரிக் ஹைப்ரிட் என இரண்டு வேரியண்ட்களில் கிடைக்கும் என தெரிகிறது. புதிய மாடல் எத்தனை நிறங்களில் அறிமுகமாகும் என்பது தெளிவற்ற நிலையில் தான் உள்ளது. ஆனாலும், இந்த கார் நெக்சா பிராண்டிங்கில் பிரபலமான செலஸ்டியல் புளூ நிறத்தில் கிடைக்கும் என தெரியவந்துள்ளது. 

இதையும் படியுங்கள்: இந்தியாவில் டாமினர் சீரிஸ் விலை உயர்வு - ஷாக் கொடுத்த பஜாஜ் ஆட்டோ..!

2022 மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் மாருதி மற்றும் டொயோட்டா கூட்டணியில் உருவாகி இருக்கிறது. சமீபத்தில் தான் டொயோட்டா நிறுவனம் அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலை அறிமுகம் செய்தது. இதே காரின் மற்றொரு வேரியண்ட் மாருதி சுசுகி பிராண்டிங்கில் கிராண்ட் விட்டாரா பெயரில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இரு மாடல்களும் கர்நாடகா மாநிலத்தில் உள்ள டொயோட்டா நிறுவனத்தின் பிடாடி ஆலையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதையும் படியுங்கள்: புதுசா எஸ்.யு.வி. வாங்க போறீங்களா? இந்தியாவின் டாப் 5 மாடல்கள் எவை தெரியுமா?

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா மாடல் கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, டாடா ஹேரியர், எம்ஜி ஆஸ்டர் மற்றும் டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது. முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா அர்பன் குரூயிசர் ஹைரைடர் மாடலின் இந்திய விலை விவரங்களும் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

புதிய ஹைரைடர் மாடல் இரண்டு விதமான பவர்டிரெயின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் மைல்டு  ஹைப்ரிட் மற்றும் ஸ்டிராங் ஹைப்ரிட் வடிவில் வழங்கப்படுகிறது. இதன் மைல்டு ஹைப்ரிட் யூனிட் 100.5 ஹெச்.பி. பவர், 135 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios