புதுசா எஸ்.யு.வி. வாங்க போறீங்களா? இந்தியாவின் டாப் 5 மாடல்கள் எவை தெரியுமா?
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் விற்பனை அடைப்படையில் டாப் 5 எஸ்.யு.வி.க்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள மாடல்களின் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
டாடா நெக்சான்: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நெக்சான் மாடல் ஜூன் 2022 மாதத்தில் மட்டும் 14 ஆயிரத்து 295 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. இந்த சப்-4 மீட்டர் எஸ்.யு.வி. மாடல் ஜூன் 2021 மாதத்துடன் ஒப்பிடும் போது 78 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: எலெக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்திக்காக முதலீடு.... மஹிந்திரா போடும் சூப்பர் ஸ்கெட்ச்...!
ஹூண்டாய் கிரெட்டா: இந்திய சந்தையில் கடந்த மாதம் அதிகம் விற்பனையான எஸ்.யு.வி. மாடல்களில் ஹூண்டாய் கிரெட்டா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த மாடல் ஜூன் 2022 மாதத்தில் மட்டும் 13 ஆயிரத்து 790 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இது 2021 ஜூன் மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது 39 சதவீதம் அதிகம் ஆகும்.
இதையும் படியுங்கள்: இனி used cars-யும் விற்பனை செய்வோம்... இந்திய விற்பனையில் டொயோட்டா எடுத்த திடீர் முடிவு...!
tata Punch SUV car
டாடா பன்ச்: புதிய கார் வாங்குவோர் அதிகம் தேர்வு செய்யும் மாடலாக டாடா பன்ச் இருக்கிறது. கடந்த மாத விற்பனையில் டாடா பன்ச் 10 ஆயிரத்து 414 யூனிட்களை பதிவு செய்து உள்ளது. இந்த வகையில், புதிய டாடா பன்ச் மாடல் இந்திய சந்தையின் அதிகம் விற்பனையாகும் எஸ்.யு.வி. பட்டியலில் இணைந்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: மீண்டும் விலை உயர்வு... டாடா மோட்டார்ஸ் அறிவிப்பால் ஷாக் ஆன வாடிக்கையாளர்கள்...!
ஹூண்டாய் வென்யூ: இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் கணிசமான விற்பனையை பதிவு செய்யும் ஹூண்டாய் கார் மாடலாக புதிய வென்யு இருக்கிறது. ஜூன் 2022 மாதத்தில் மட்டும் வென்யூ மாடலை சுமார் 10 ஆயிரத்து 321 பேர் வாங்கி உள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த காரை 4 ஆயிரத்து 865 பேர் மட்டுமே வங்கி இருந்தனர்.
கியா செல்டோஸ்: இந்தியாவில் அதிகம் விற்பனையாகி வரும் எஸ்.யு.வி.க்களில் ஒன்றாக கியா செல்டோஸ் இருக்கிறது. கடந்த மாதத்தில் மட்டும் கியா செல்டோஸ் மாடல் 8 ஆயிரத்து 388 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் இந்த மாடல் 8 ஆயிரத்து 549 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது இரண்டு சதவீதம் குறைவு ஆகும்.