எலெக்ட்ரிக் வாகன பேட்டரி உற்பத்திக்காக முதலீடு.... மஹிந்திரா போடும் சூப்பர் ஸ்கெட்ச்...!
மஹிந்திரா நிறுவனம் தனது எதிர்கால எலெக்ட்ரிக் வாகன தேவையை பூர்த்தி செய்து கொள்ள இப்போதே ஆயத்த பணிகளை துவங்கி விட்டது.
இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளரான மஹிந்திரா எலெக்ட்ரிக் வாகன பேட்டரி செல் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அறிவித்து இருக்கிறது. மஹிந்திரா நிறுவனம் எதிர்கால எலெக்ட்ரிக் மயமாக்கலுக்கு தேவைகளை எதிர்கொள்ள இது மிகவும் அவசியமான ஒன்று என அந்நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
இதையும் படியுங்கள்: இனி used cars-யும் விற்பனை செய்வோம்... இந்திய விற்பனையில் டொயோட்டா எடுத்த திடீர் முடிவு...!
முன்னதாக மஹிந்திரா நிறுவனம் புதிதாக துவங்கப்படும் எலெக்ட்ரிக் வாகன பிரிவுக்காக நிதி திரட்டியது. இந்த நிறுவனத்தின் மதிப்பு ரூ. 72 ஆயிரத்து 100 கோடி என கணக்கிடப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்திற்காக மஹிந்திரா நிறுவனம் ப்ரிடிஷ் இண்டர்நேஷனல் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்திடம் இருந்து ரூ. 1,981 கோடி முதலீடு பெற்றது. இது தவிர போக்ஸ்வேகன் ஏஜி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து எலெக்ட்ரிக் வாகன உபகரணங்களான பேட்டரி மற்றும் மோட்டார்களை வாங்க மஹிந்திரா கூட்டணி அமைப்பது பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இதையும் படியுங்கள்: மீண்டும் விலை உயர்வு... டாடா மோட்டார்ஸ் அறிவிப்பால் ஷாக் ஆன வாடிக்கையாளர்கள்...!
தயார் நிலையில் மஹிந்திரா:
போக்ஸ்வேகன் நிறுவனத்துடனான கூட்டணி மூலம் மிக குறுகிய காலம் மற்றும் அதை விட சற்றே அதிக காலத்திற்கு மட்டும் தான் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இதைத் தொடர்ந்து சர்வதேச நிறுவனத்தில் முதலீடு செய்யும் தேவை ஏற்பட்டால், அதற்கும் மஹிந்திரா தயார் நிலையில் உஎள்ளது என மஹிந்திரா நிறுவன தலைமை செயல் அதிகாரி அனிஷ் ஷா தெரிவித்து இருக்கிறார்.
இதையும் படியுங்கள்: ரூ. 1925 கோடி முதலீட்டில் முற்றிலும் புதிய எலெக்ட்ரிக் நிறுவனம்.. மஹிந்திராவின் வேற லெவல் திட்டம்..!
“எங்களின் நோக்கம் பேட்டரி உற்பத்தியை சார்ந்து இல்லை. இதை செய்வதற்கு தரமான நிறுவனங்கள் உள்ளன. நாங்கள் அவர்களுடன் கூட்டணி அமைக்க முடியும், நாங்கள் அதில் ஏதாவது ஒரு வகையில் முதலீட்டாளராக இருப்போம். நாங்கள் அதனை சொந்தமாக வைத்துக் கொண்டு நடத்த வேண்டிய அவசியம் இல்லை.”
கூட்டணி மற்றும் முதலீடு:
“போக்ஸ்வேகன் நிறுவனத்துடன் நாங்கள் வைத்திருப்பதை போன்ற கூட்டணி கிடைக்கும் பட்சத்தில் அதனை பயன்படுத்திக் கொள்வோம். இதற்கு நாங்கள் ஏதேனும் வகையில் முதலீடு செய்ய நேர்ந்தால் அதை நிச்சயம் செய்து எங்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வோம்,” என மஹிந்திரா தலைமை செயல் அதிகாரி அனிஷ் ஷா தெரிவித்து உள்ளார்.
மஹிந்திரா நிறுவனம் முதற்கட்டமாக ஐந்து எலெக்ட்ரிக் ஸ்போர்ட் யுடிலிட்டி வாகனங்கள் அதாவது எஸ்.யு.வி. மாடல்களை அடுத்த சில ஆண்டுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இந்த மாடல்கள் மஹிந்திரா நிறுவனத்தின் வருடாந்திர விற்பனையில் 30 சதவீதம் அதாவது 2 லட்சம் யூனிட்கள் வரை உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.