Asianet News TamilAsianet News Tamil

ரூ. 94 ஆயிரம் மதிப்புள்ள பலன்கள்... அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ரெனால்ட்..!

ரெனால்ட் நிறுவனம் இந்திய சந்தையில் ஜூலை மாதத்திற்கான சலுகை விவரங்களை வெளியிட்டு உள்ளது. இது பற்றி பார்ப்போம். 

Renault offers upto rs 94,000 discounts July 2022
Author
First Published Jul 12, 2022, 8:29 AM IST

ரெனால்ட் நிறுவனம் தனது க்விட், கைகர் மற்றும் டிரைபர் மாடல்களுக்கு அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகளை வழங்குகிறது. இந்த சலுகைகள் ஜூலை மாத இறுதி வரை வழங்கப்படுகிறது. இதில் வாடிக்கையாளர்கள் அதிகபட்சம் ரூ. 94 ஆயிரம் வரை சேமிக்க முடியும். அந்த வகையில் இந்த மாதத்திற்கான சலுகை விவரங்களை பார்ப்போம்.

இதையும் படியுங்கள்: இணையத்தில் லீக் ஆன மாருதி சுசுகி கிராண்ட் விட்டாரா வேரியண்ட் விவரங்கள்!

ரெனால்ட் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் மாடலான க்விட் வாங்குவோருக்கு ரூ. 82 ஆயிரம் வரையிலான பலன்கள் வழங்கப்படுகிறது. 2022 ரெனால்ட் க்விட் மாடலை வாங்குவோருக்கு ரூ. 30 ஆயிரம் தள்ளுபடி, ரூ. 37 ஆயிரம் லாயல்டி பலன்கள் மற்றும் ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் என மொத்தம் ரூ. 77 ஆயிரம் வரை சேமிக்க முடியும். 2021 ரெனால்ட் க்விட் வாங்குவோருக்கு ரூ. 5 ஆயிரம் கூடுதல் பலன்கள் வழங்கப்படுகிறது. இந்த சலுகை 0.9 மற்றும் 1 லிட்டர் வேரியண்ட்களுக்கு பொருந்தும்.

இதையும் படியுங்கள்: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் 800 சதவீத வளர்ச்சி... மாஸ் காட்டிய இந்திய நிறுவனம்..!

இந்திய சந்தையில் ரெனால்ட் க்விட் மாடல் மாருதி சுசுகி ஆல்டோ மற்றும் எஸ் பிரெஸ்ஸோ போன்ற கார்களுக்கு போட்டியாக அமைகிறது.

Renault offers upto rs 94,000 discounts July 2022

இதையும் படியுங்கள்: இந்தியாவில் டாமினர் சீரிஸ் விலை உயர்வு - ஷாக் கொடுத்த பஜாஜ் ஆட்டோ..!

ரெனால்ட் கைகர்:

காம்பேக்ட் எஸ்.யு.வி. மாடலான கைகர் வாங்குவோருக்கு ரூ. 75 ஆயிரம் வரையிலான பலன்கள் கிடைக்கும். அதாவது ரூ. 55 ஆயிரம் லாயல்டி பலன்கள், ரூ. 10 ஆயிரம் கார்ப்பரேட் தள்ளுபடி, ரூ. 10 ஆயிரம் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது. இந்திய சந்தையில் கைகர் மாடல் டாடா நெக்சான், மாருதி சுசுகி பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வென்யூ போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.

ரெனால்ட் டிரைபர்:

ரெனால்ட் டிரைபர் எம்.பி.வி. மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த மாதம் ரூ. 94 ஆயிரம் வரை சேமிக்க முடியும். கைகர் போன்றே டிரைபர் மாடலிலும் 1 லிட்டர், மூன்று சிலிண்டர் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலை வாங்கும் பயனர்களுக்கு ரூ. 40 ஆயிரம் வரை தள்ளுபடி, ரூ. 44 ஆயிரம் மதிப்புள்ள லாயல்டி பலன்கள் மற்றும் ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள எக்சேன்ஜ் சலுகைகள் வழங்கப்படுகிறது.

டிரைபர் லிமிடெட் எடிஷன் வாங்குவோருக்கு எந்த விதமான தள்ளுபடியும் வழங்கப்படவில்லை. மாறாக ரூ. 54 ஆயிரம் மதிப்புள்ள சேமிப்புகள் கிடைக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios