ரூ.10 லட்சத்துக்குள் கிடைக்கும் மாருதி சுசூகி எர்டிகா, மஹிந்திரா போலிரோ, போலிரோ நியோ, மாருதி சுசூகி ஈக்கோ, ரெனால்ட் ட்ரைபர் உள்ளிட்ட 5 சிறந்த 7 சீட்டர் கார்களைப் பற்றி அறியலாம்.
இந்திய கார் வாங்குவோரிடையே 7 சீட்டர் கார்களுக்கு அதிக தேவை உள்ளது. 6 அல்லது 7 பேர் வசதியாக பயணிக்க ஏற்ற இந்த கார்கள், 5 முதல் 7 உறுப்பினர்கள் கொண்ட குடும்பங்களுக்கு ஏற்றதாக உள்ளது. SUV மற்றும் MPV வகைக் கார்கள் பட்ஜெட்டுக்குள் கிடைக்கின்றன. 10 லட்ச ரூபாய்க்குள் கிடைக்கும் ஐந்து சிறந்த 7 சீட்டர் கார்களைப் பற்றி இங்கே காணலாம்.
7 சீட்டர் கார் வாங்குவோரின் முதல் தேர்வாக பெரும்பாலும் மாருதி சுசூகி எர்டிகா இருக்கிறது. எர்டிகாவின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹8.84 லட்சத்தில் தொடங்குகிறது. 1462 சிசி பெட்ரோல் எஞ்சின் கொண்ட எர்டிகா, லிட்டருக்கு 20.51 கிமீ மைலேஜ் தருகிறது. அழகான தோற்றம், சிறப்பம்சங்கள், வசதிகள், மறுவிற்பனை மதிப்பு என அனைத்திலும் இந்த கார் சிறந்து விளங்குகிறது.
குறைந்த விலையில் 7 சீட்டர் கார் விரும்புவோருக்கு மஹிந்திரா போலிரோ நியோ மிகவும் பிரபலமானது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ₹9.95 லட்சத்தில் தொடங்குகிறது. 1493 சிசி எஞ்சின் கொண்ட போலிரோ நியோ, லிட்டருக்கு 17.29 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது.
மஹிந்திராவின் பிரபலமான 7 சீட்டர் காரான போலிரோவின் தற்போதைய எக்ஸ்-ஷோரூம் விலை ₹9.79 லட்சத்தில் தொடங்குகிறது. சிறிய நகரங்களில் போலிரோ அதிகம் விற்பனையாகிறது. இதன் கேபினில் அதிக இடவசதி உள்ளது. 1493 சிசி எஞ்சின் கொண்ட இது, லிட்டருக்கு 16 கிமீ மைலேஜ் தருகிறது.
மாருதி சுசூகி சமீபத்தில் ஈக்கோவின் புதிய 6 சீட்டர் வேரியண்டை (ஈக்கோ 6 சீட்டர் STD) அறிமுகப்படுத்தியது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ₹5.99 லட்சம். இந்த பெட்ரோல் மேனுவல் வேன், லிட்டருக்கு 19.71 கிமீ மைலேஜ் தருகிறது.
ரெனால்ட் நிறுவனத்தின் குறைந்த விலை 7 சீட்டர் MPV ஆகும் ட்ரைபர். இந்தியாவின் மிகவும் குறைந்த விலை 7 சீட்டர் காரான ட்ரைபரின் எக்ஸ்-ஷோரூம் விலை ₹6.15 லட்சம் முதல் ₹8.97 லட்சம் வரை உள்ளது. அதாவது, 10 லட்ச ரூபாய்க்குள் ட்ரைபரின் சிறப்பம்சங்கள் நிறைந்த வேரியண்ட்டையும் வாங்கலாம். 999 சிசி பெட்ரோல் எஞ்சின் கொண்ட இந்த MPV, லிட்டருக்கு 20 கிமீ மைலேஜ் தருவதாக நிறுவனம் கூறுகிறது.
