மாருதி சுசுகி பலேனோ ஹேட்ச்பேக், Bharat NCAP விபத்து சோதனையில் வயது வந்தோர் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது. 6 ஏர்பேக்குகள் கொண்ட மாடல் சிறப்பான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்தியாவில் கார் பாதுகாப்பு தர அளவுகளை உயர்த்தும் நோக்கில் செயல்பட்டு வரும் பாரத் NCAP இன் (Bharat New Car Assessment Program) கீழ் மாருதி சுசுகி பலேனோ ஹேட்ச்பேக் வாகனம் சமீபத்தில் விபத்து சோதனைக்கு உட்பட்டது. இதன் முடிவுகள், இந்திய சந்தையில் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான பாதுகாப்பு தரங்களை வெளிப்படுத்துகின்றன.
பலேனோ மாடல் காரின் பாதுகாப்பு
6 ஏர்பேக்குகள் கொண்ட பலேனோ மாடல் வயது வந்தோர் பாதுகாப்புக்கான மதிப்பீட்டில் 32 புள்ளிகளில் 26.52 புள்ளிகள் பெற்று, 4 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. அதேபோல, 2 ஏர்பேக்குகள் கொண்ட மாடல் 24.04 புள்ளிகளை பெற்று குறைவாக உள்ளது. குழந்தைகள் பாதுகாப்புக்கான மதிப்பீட்டில், இரு வகைகளும் 49 புள்ளிகளில் 34.81 புள்ளிகள் பெற்று 3 நட்சத்திரங்களை பெற்றுள்ளன. இரு மாடல்களிலும் ISOFIX மவுண்ட் கொண்ட பின்புற இருக்கைகள் கொண்டுள்ளன.

6 ஏர்பேக்குகள்
வாகனத்தின் முன்புற சிதைவுத்தன்மையை மதிப்பீடு செய்யும் சோதனையில் இரு மாடல்களும் 16 புள்ளிகளில் 11.54 புள்ளிகள் பெற்றன. ஆனால் பக்கவாட்டு சோதனையில் 6 ஏர்பேக்குகள் மாடல் 12.50 புள்ளிகள் மற்றும் 2 ஏர்பேக்குகள் மாடல் 14.99 புள்ளிகள் பெற்றுள்ளன. இது சில பாதுகாப்பு அம்சங்களில் மாறுபாடு காட்டுகிறது.
360 டிகிரி கேமரா
பாதுகாப்பு அம்சங்களில் ESC, ஹில் ஹோல்ட், ABS + EBD, முன் இருக்கை பெல்ட்களுக்கு ப்ரீ-டென்ஷனர்கள் மற்றும் ஃபோர்ஸ் லிமிட்டர்கள், 360 டிகிரி கேமரா, ரிவர்ஸ் சென்சார்கள், ISOFIX குழந்தை இருக்கை ஹூக் உள்ளிட்டவை முக்கியத்துவம் பெறுகின்றன. மேலும், IRVM, வேக-உணர்வு கதவு பூட்டு மற்றும் மூன்று பாயிண்ட் பெல்ட்களும் உள்ளன.
மேம்பட்ட ஏர்பேக் பாதுகாப்பு அம்சங்கள்
பாலேனோவின் பாதுகாப்பு தரங்கள் இப்போது Tata Altroz மற்றும் Hyundai i20 போன்ற வாகனங்களுடன் நேரடி போட்டியில் உள்ளது. மேம்பட்ட ஏர்பேக் பாதுகாப்பு அம்சங்களை கொண்டு, உயர் மாடல் தேர்வு செய்யும் வாடிக்கையாளர்களை இது அதிகம் ஈர்க்கும். மாருதி தற்போது அனைத்து மாடல்களிலும் 6 ஏர்பேக்குகள் தரம் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
