இனி பட்டி தொட்டி எல்லாம் இந்த பைக்தான்! சீப்பான ரேட்டில் கிடைக்கும் பஜாஜ் சிஎன்ஜி பைக்!
பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ், விரைவில் அடுத்த சிஎன்ஜி பைக்கை வெளியிட தயாராகி வருவதாகக் கூறினார். அடுத்து வருவதை ஃப்ரீடம் 125 பைக்கை விட இன்னும் குறைவான விலையில் கிடைக்கும் என்றும் 100 சிசி இன்ஜின் கொண்டதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் உலகின் முதல் சிஎன்ஜி பைக்கை பஜாஜ் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஃப்ரீடம் 125 என்ற இந்த புதிய சிஎன்ஜி பைக்கிற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் முதல் டெலிவரி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 20 ஆயிரம் பைக்குக வரை விற்பனையாகும் எனக் கூறப்படுகிறது. 2025ஆம் ஆண்டு ஜனவரியில் எந்த எண்ணிக்கை 40,000 ஐத் தாண்டும் என்றும் கணிக்கப்படுகிறது. இந்த பைக்கிற்குக் கிடைத்துவரும் அமோக வரவேற்பு காரணமாக, பஜாஜ் நிறுவனம் அடுத்த சிஎன்ஜி பைக்கை தயாரிக்கத் ரெடியாகிவிட்டது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் ராஜீவ் பஜாஜ், விரைவில் அடுத்த சிஎன்ஜி பைக்கை வெளியிட தயாராகி வருவதாகக் கூறினார். அடுத்து வருவதை ஃப்ரீடம் 125 பைக்கை விட இன்னும் குறைவான விலையில் கிடைக்கும் என்றும் 100 சிசி இன்ஜின் கொண்டதாக இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் முதல் டர்போ என்ஜின் கொண்ட சிஎன்ஜி கார்! விலையும் கம்மிதான்!
குறைந்த விலையில் அதிக மைலேஜ் கொடுக்கும் சிஎன்ஜி பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் விலை காரணமாக மாற்று எரிபொருளில் இயங்கும் வாகனங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் சூழலில், குறைந்த விலையில் பஜாஜ் சிஎன்ஜி பைக் வந்தால் பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
தொடர்ந்து பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலும் குறைந்த விலை மாடல் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இப்போதைக்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு டிமாண்ட் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பஜாஜ் நிறுவனம் புதிய பைக்கை அறிமுகம் செய்யும் எனச் சொல்லப்படுகிறது.
ஃப்ரீடம் 125 சிஎன்ஜி பைக்:
தினசரி எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் வகையில் பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கமான பெட்ரோல் பைக்குகளை விட 50 சதவீதம் வரை செலவைக் குறைக்கும் என்று பஜாஜ் கூறுகிறது. 2-லிட்டர் பெட்ரோல் டேங்கையும், 2 கிலோ சிஎன்ஜி டேங்கையும் கொண்ட ஃப்ரீடம் 125 பைக்கில் சுமார் 330 கி.மீ. வரை பயணிக்க முடியும்.
நீண்ட இருக்கை, எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர்கள், புளூடூத் இணைப்பு போன்ற கூடுதல் வசதிகள் உள்ளன. பஜாஜ் ஃப்ரீடம் 125 பைக்கின் ஆரம்ப விலை ரூ.95,000 (எக்ஸ்-ஷோரூம்). அதிகபட்ச விலை ரூ.1.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது.