Auto Expo 2023: பட்டையை கிளப்பும் எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி.. விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம்
எம்ஜி நிறுவனம் தன்னுடைய ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவியை ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தி உள்ளது.
கொரோனா தொற்றுக்கு பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்டமாக ஆட்டோ எக்ஸ்போ 2023 தொடங்கி உள்ளது. உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் வருகின்ற ஜனவரி 11 முதல் ஜனவரி 18 வரை இந்த ஆட்டோ எக்ஸ்போ நடைபெற உள்ளது. ஆட்டோ எக்ஸ்போவில் 45 கார் உற்பத்தியாளர்கள் உட்பட 70 கண்காட்சியாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
இதில் இரண்டு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை காட்சிபடுத்தப்பட உள்ளது. பேஸ்லிஃப்ட் ஹெக்டர் (Facelift Hector), இஆர்எக்ஸ் 5 (eRX5), எம்ஜி 6 (MG6), மைஃபா 9 (MIFA 9), மார்வல் ஆர் (Marvel R), எம்ஜி 5 (MG5), எம்ஜி4 மற்றும் எம்ஜி இஎச்எஸ் பிளக்-இன் ஹபிரிட் கார் உள்ளிட்ட பல வகைகளை ரிலீஸ் செய்து அசத்தியுள்ளது எம்ஜி நிறுவனம்.
இதையும் படிங்க..வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு - சூப்பர் மீடியர் 650யின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!
எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட் எஸ்யூவி இந்தியாவில் ரூ.14.72 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, இது இந்தியாவில் 5 மற்றும் 6 இருக்கைகள் கொண்ட கட்டமைப்புகளுடன் ரூ.22.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.
நெக்ஸ்ட் ஜெனரல் எம்ஜி ஹெக்டரின் ஸ்மார்ட் ஆட்டோ டர்ன் இன்டிகேட்டர்கள் தொந்தரவு இல்லாத மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் அனுபவத்தை வழங்குகிறது. வாகனம் ஓட்டுபவர் யு-டர்ன் செய்யும்போது அல்லது பார்க்கிங் இடத்தில் இருந்து வெளியே இழுக்கும்போது, இண்டிகேட்டரை வைக்கத் தவறினால், இந்த தானியங்கு உதவியாக இருக்கும்.
இந்த புதிய எஸ்யூவி (SUV) ஆனது இந்தியாவில் உள்ள மிகப்பெரிய 35.56 cm (14-inch) HD போர்ட்ரெய்ட் பொழுதுபோக்கு அமைப்பைக் கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. காரைப் பூட்ட, திறக்க, ஸ்டார்ட் செய்யவும், இயக்கவும் டிஜிட்டல் மூலம் பயன்படுத்தலாம். ரிமோட் லாக் / அன்லாக் விருப்பத்தைப் பயன்படுத்தி ஆட்டோமொபைலை ரிமோட் மூலம் திறக்கலாம்.
ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி HD கேமரா, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP), டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் (TCS), ஹில் அசிஸ்ட் கண்ட்ரோல் (HAC), ஆல் வீல் டிஸ்க் பிரேக்குகள், அனைத்து இருக்கைகளுக்கும் 3-பாயின்ட் சீட் பெல்ட்கள், எலக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் (EPB), மற்றும் முன் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை புதிய எம்ஜி ஹெக்டர் ஃபேஸ்லிஃப்ட்டில் காணப்படும் சில கூடுதல் முக்கியமான பாதுகாப்பு அம்சங்களாகும்.
இதையும் படிங்க..Auto Expo 2023: அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்.. என்னென்ன வசதி இருக்கு தெரியுமா ?