ஒரு முறை சார்ஜ் செய்தால் 400 கிமீ ! அதுமட்டுமா.? ப்ரீமியம் அம்சங்களுடன் வரும் எம்ஜி 4 எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர்
எம்ஜி நிறுவனத்தின் புதிய கார் ஆன எம்ஜி 4 எலெக்ட்ரிக் கிராஸ்ஓவர் 2023 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்டமாக ஆட்டோ எக்ஸ்போ 2023 தொடங்க உள்ளது.உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் வருகின்ற ஜனவரி 11 முதல் ஜனவரி 18 வரை இந்த ஆட்டோ எக்ஸ்போ நடைபெற உள்ளது.
ஆட்டோ எக்ஸ்போவில் 45 கார் உற்பத்தியாளர்கள் உட்பட 70 கண்காட்சியாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இதில் இரண்டு சக்கர வாகனங்கள் முதல் கனரக வாகனங்கள் வரை காட்சிபடுத்தப்பட உள்ளது.
இதையும் படிங்க..Auto Expo 2023: அட்டகாசமான அம்சங்களுடன் வெளிவரும் கியா சோனெட் ஃபேஸ்லிஃப்ட்.. என்னென்ன வசதி இருக்கு தெரியுமா ?
பிரபல நிறுவனமான எம்ஜி, இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்தியுள்ளார். அதில் ஒன்று, ஏர் காம்பேக்ட் எலக்ட்ரிக் கார். மற்றொன்று எம்ஜி 4 எலக்ட்ரிக் கிராஸ் ஓவர் ஆகும்.
MG 4 ஆனது கோண ஹெட்லேம்ப்கள் மற்றும் இருபுறமும் செங்குத்தாக வைக்கப்பட்டுள்ள ஃபாக் லேம்ப்கள் மற்றும் சென்டர் ஏர் இன்லெட்கள் கொண்ட டூயல்-டோன் பம்பர்களுடன் சாய்வான பானெட்டுடன் ஸ்டைலாக தெரிகிறது. மேலும் டூயல்-விங் ஸ்பாய்லர் மற்றும் முழு அகல LED டெயில் லேம்ப்கள் இடம்பெற்றுள்ளது.
10.25-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஏழு அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், ஒரு பிளாட்-பாட்டம் ஸ்டீயரிங், டேஷ்போர்டு-ஒருங்கிணைந்த ஏர்கான் வென்ட்கள் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது.
இதையும் படிங்க..வெளியானது புதிய ராயல் என்ஃபீல்டு - சூப்பர் மீடியர் 650யின் விலை எவ்வளவு தெரியுமா? முழு விபரம் இதோ!
ரோட்டரி டயல் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் பேட் கொண்ட சென்டர் கன்சோலையும் உள்ளடக்கியுள்ளது. MG 4 ஆனது 360-டிகிரி கேமரா, முன் குளிர்ந்த இருக்கைகள் மற்றும் அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங், லேன் கீப் அசிஸ்ட் போன்ற ADAS அம்சங்களுடன் சிறந்த அப்டேட்களுடன் வருகிறது.
உலகளவில், MG 4 இரண்டு பேட்டரி பேக்குகளுடன் கிடைக்கிறது -51kWh மற்றும் 64kWh. இந்த இரண்டு பவர்டிரெய்ன்களும் முறையே 350 கிமீ மற்றும் 450 கிமீ WLTP சுழற்சியைக் கொண்டுள்ளன.
ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால், 400 கிலோ மீட்டர் தூரத்திற்கும் அதிகமாக பயணிக்க முடியும் என்று கூறுகிறார்கள். இதற்க்கான வரவேற்பை பொறுத்தே இந்தியாவில் இந்த மாடலை அறிமுகப்படுத்த வேண்டுமா ? வேண்டாமா ? என்பதை எம்ஜி நிறுவனம் முடிவு செய்யும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..Auto Expo 2023 : கியா முதல் டாடா மோட்டார்ஸ் வரை.. ஆட்டோ எக்ஸ்போவில் கலக்கும் முன்னணி நிறுவனங்கள்!!