Today Rasi Palan : செப்டம்பர் 26, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

விருச்சிக ராசி நேயர்களே, இந்த நாள் உங்களுக்கு மிகவும் நல்ல நாளாக இருக்கும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மனதில் தெளிவுடன் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதிய யோசனைகளுடன் காணப்படுவீர்கள். உங்கள் மனது இன்று சமநிலையுடன் இருக்கும். முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் அவசரம் வேண்டாம். நிதானத்துடன் செயல்பட்டால் குழப்பங்கள் விலகி தெளிவான பாதை கிடைக்கும்.

நிதி நிலைமை:

இன்று உங்கள் நிதியில் சமநிலை திரும்பும் நாளாக அமையக்கூடும். இதுவரை இருந்த நிதி தடைகள் விலக ஆரம்பிக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படாது. எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். பொழுதுபோக்கு அல்லது பிற விஷயங்களுக்காக சிறிது பணத்தை செலவிட நேரிடலாம். இருப்பினும் செலவுகளை கண்காணித்து பட்ஜெட்டை மீறாமல் இருப்பது நல்லது. பெரிய முதலீடுகளை ஒத்திப் போடுவது நன்மை தரும்.

தனிப்பட்ட வாழ்க்கை:

உறவுகளில் சமநிலையை காண முயற்சிப்பீர்கள். உங்கள் துணையுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது நெருக்கத்தை அதிகரிக்கும். திருமணமானவர்கள் துணையுடன் இருந்த மனக்கசப்புகளை பேசி தீர்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தனிப்பட்ட வளர்ச்சி அதிகரிக்கும். தொழில் ரீதியாகவும் இன்று நல்ல பலன்கள் கிடைக்கலாம். உணர்வுகளை வெளிப்படுத்துவதில் தெளிவாக இருப்பீர்கள். நண்பர்கள், உறவினர்களிடம் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்

பரிகாரங்கள்:

காலை எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டியது அவசியம். இன்று உங்கள் குலதெய்வத்தை நினைத்து வீட்டில் விளக்கேற்றி வழிபடலாம். சிவ வழிபாடு அல்லது துர்கை வழிபாடு நன்மைகளைத் தரும். மன அழுத்தத்தை குறைக்க தியானம் அல்லது மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.