MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்தவே முடியாது.! எவ்வளவு கீழ விழுந்தாலும் சிங்கம் மாதிரி எழுந்து நிப்பாங்க.!

Astrology: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்தவே முடியாது.! எவ்வளவு கீழ விழுந்தாலும் சிங்கம் மாதிரி எழுந்து நிப்பாங்க.!

3 zodiac signs that are not easily defeated: ஜோதிட சாஸ்திரங்களின்படி குறிப்பிட்ட சில ராசிகளை சேர்ந்தவர்களை எந்த சூழ்நிலையிலும் தோற்கடிக்கவே முடியாதாம். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Sep 24 2025, 02:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
எளிதில் தோற்கடிக்க முடியாத 3 ராசிகள்
Image Credit : AI Generated

எளிதில் தோற்கடிக்க முடியாத 3 ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் ஒவ்வொரு ராசிக்கும் தனித்துவமான பண்புகள், பலங்கள் மற்றும் பலவீனங்கள் உள்ளன. சில ராசிக்காரர்கள் தங்கள் மன உறுதி, புத்திசாலித்தனம், உறுதியான மனப்பான்மை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவற்றால் எளிதில் தோற்கடிக்க முடியாதவர்களாக விளங்குகின்றனர். இந்தக் கட்டுரையில் எளிதில் தோற்கடிக்க முடியாத மூன்று ராசிக்காரர்கள் பற்றியும், அவர்களை தோற்கடிப்பது ஏன் கடினம் என்பது குறித்தும் பார்க்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மேஷம்:
Image Credit : AI Generated

மேஷம்:

மேஷ ராசிக்காரர்கள் செவ்வாய் பகவானால் ஆளப்படுபவர்கள். செவ்வாய் பகவான் வீரம், தைரியம், மன உறுதி மற்றும் ஆற்றல் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். எனவே மேஷ ராசிக்காரர்கள் மனதளவில் மிகப்பெரிய வலிமை வாய்ந்தவர்களாக விளங்குகின்றனர். இவர்கள் எந்த சூழ்நிலையையும் எதிர்த்துப் போராடி ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டுள்ளனர். அதிக தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும், தைரியம் நிறைந்தவர்களாகவும் காணப்படுகின்றனர். எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ளும் மன உறுதி இவர்களுக்கு இயல்பாகவே உள்ளது. இவர்களின் இந்த தன்னம்பிக்கை எதிரிகளை குழப்பத்தில் ஆழ்த்தி, அவர்களை மனதளவில் தோற்கடிக்கும்.

மேலும் இவர்கள் தங்கள் இலக்குகளை அடைய வேகமாக செயல்படுவார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் உடனடியாக முடிவெடுத்து அதை செயல்படுத்துவதால் இவர்களின் திட்டங்களை எதிரிகள் தெரிந்து கொள்வது மிக கடினம். தோல்விகளை பாடமாக எடுத்துக் கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து வெற்றி பெறுவார்கள். இதுவே மேஷ ராசிக்காரர்களை தோற்கடிக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணமாகும்.

34
சிம்மம்:
Image Credit : AI Generated

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் சூரிய பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் இயல்பாகவே தைரியமானவர்கள் மற்றும் தலைமைப் பண்பு கொண்டவர்கள். அனைவரின் கவனத்தின் மையமாகவும் தாங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். தங்கள் கவர்ச்சியான ஆளுமையால் மற்றவர்களை எளிதில் கவர்ந்து இழுப்பார்கள். உடன் பழகும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்து வைத்துக் கொள்ளும் திறன் படைத்தவர்கள். தங்கள் இலக்குகளை அடைவதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். இவர்களின் உறுதியான அணுகுமுறை எதிரிகளை பின்னடைவை சந்திக்க வைக்கிறது. இவர்களை எதிர்க்க முயல்பவர்கள் தனித்து விடப்படுவார்கள்.

சிம்ம ராசிக்காரர்கள் தோல்வியை எதிர்கொண்டாலும் அதை கம்பீரமாக ஏற்றுக் கொண்டு மீண்டு வருவார்கள். இவர்களின் பெருந்தன்மையான இயல்பு மற்றவர்களை தன் பக்கம் இழுக்க உதவுகிறது. இதனால் சிம்ம ராசிக்காரர்களை எதிர்ப்பவர்கள் பிறரின் ஆதரவை இழந்து, தனிமையில் போராடி, இறுதியில் தோல்வியையே தழுவுவார்கள்.

44
தனுசு:
Image Credit : AI Generated

தனுசு:

தனுசு ராசி குருபகவான் உடைய சொந்த வீடாகும். எனவே தனுசு ராசிக்காரர்களுக்கு ஞானம் அதிக அளவில் இருக்கும். இவர்கள் எந்த ஒரு சூழ்நிலையானாலும் தனது சாதுரியத்தால் சமாளித்து வெற்றி காணும் திறன் படைத்தவர்கள். இவர்கள் எந்த ஒரு சவாலையும் வாய்ப்பாக நினைத்து அதை தைரியமாக எதிர்கொள்வார்கள். இவர்களின் இந்த உறுதியான மனநிலை அவர்களை எதிர்க்க முயல்பவர்களை வியப்பில் ஆழ்த்தும். பல்வேறு கலாச்சாரங்கள், மக்களின் மனநிலைகள், சூழ்நிலைகளை புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். இந்த புரிதல் அவர்களை எதிர்க்க முயல்பவர்களின் உத்திகளை எளிதில் புரிந்து கொண்டு அதை உடைத்தெறிய உதவுகிறது.

மேலும் தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமான மனப்பான்மை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் பாதையை எப்போதும் தாங்களே தேர்ந்தெடுப்பார்கள். இதன் காரணமாக எதிரிகள் விரிக்கும் வலையில் இவர்கள் எளிதில் சிக்கிக் கொள்வதில்லை. தனுசு ராசிக்காரர்கள் தனது அறிவு, நகைச்சுவை மற்றும் திறந்த மனதுடன் மற்றவர்களை எளிதில் வென்று விடுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology: சிம்மத்தில் நுழையும் செவ்வாய்: அதிர்ஷ்டக் கதவை தட்டப்போகும் 4 ராசிகள்.. இனி பணமழை!
Recommended image2
Weekly Rasi Palan : நவம்பர் 1 முதல் 7 வரை.. 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி இருக்கும்?
Recommended image3
Rasipalan: நவம்பர் முதல் வாரம் ஆரம்பம்..! 12 ராசிகளில் அதிர்ஷ்டக் கதவு திறக்கப்போவது யாருக்கு..?
Related Stories
Recommended image1
Astrology: இரு மடங்கு சக்தியுடன், அசுர வேகத்தில் நகரப் போகும் சனி பகவான்.! 3 ராசிகள் ராஜ வாழ்க்கை வாழப் போறீங்க.!
Recommended image2
Astrology: சந்திரனுடன் கூட்டணி அமைத்த செவ்வாய்.! செப்.24 க்கு பின்னர் இந்த 3 ராசிகளின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved