Today Rasi Palan : செப்டம்பர் 18, 2025 தேதி விருச்சிக ராசிக்கானபொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
விருச்சிக ராசி நேயர்களே இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாக அமையும் உங்கள் ஆற்றலும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் எந்த ஒரு சவாலையும் எளிதாக எதிர்கொள்வீர்கள் நீண்ட நாட்களாக தடை பட்டிருந்த வேலைகள் இன்று முடிவுக்கு வரும் நீங்கள் எடுக்க முடிவுகள் சிறப்பானதாக அமையும்.
நிதி நிலைமை:
நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் காணப்படும் புதிய வருமான வலிகள் உருவாவதற்கான வாய்ப்பு உள்ளது முதலீடு செய்ய இன்றைய நாள் ஏற்ற நாளாகும் நீண்டகால திட்டங்களில் முதலீடு செய்வதில் லாபங்களை தரும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
கணவன் மனைவிக்கு இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். பிரச்சினைகள் சரியாகி, நெருக்கம் ஏற்படும். உறவினர்களுடன் இருந்த சண்டைகள் நீங்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவழிப்பீர்கள். திருமணமானவர்கள் தங்கள் துணையின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள். இதன் காரணமாக உறவு பலப்படும்.
பரிகாரங்கள்:
காலை எழுந்தவுடன் சூரிய நமஸ்காரம் செய்வது உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. அனுமன் சாலிசா பாராயணம் செய்யலாம். அனுமன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். சிவப்பு நிறப் பொருட்களை தானமாக அளிக்கலாம்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.
