Viruchiga Rasi Weekly rasi palan: விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 28 வரையிலான காலக்கட்டம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். நீங்கள் கடினமாக உழைக்கும் அதே சமயம் சில விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. இந்த வாரம் உடல் நலம் நன்றாக இருக்கும். இருப்பினும் சில காரணங்களால் நீங்கள் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதனால் நீங்கள் சிறிது சோர்வு அல்லது மன அழுத்தத்தை உணர்வீர்கள். குருபகவான் உங்கள் ராசியின் எட்டாவது வீட்டில் அமர்ந்திருப்பதால் பயணத்தை தவிர்ப்பது நல்லது. உங்கள் உடலுக்கும் மனதுக்கும் ஓய்வு கொடுப்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
நிதி நிலைமை:
நிதிநிலைமை இன்றி சீராக இருக்கும் பண வரவு எதிர்பார்த்ததை விட சற்று குறைவாகவே இருக்கும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே திட்டமிட்டு செயல்படுவது நல்லது. இந்த வாரத்திற்கு தேவையான பட்ஜெட்டை போட்டு அதற்கு ஏற்ப செலவு செய்யுங்கள். மிகப்பெரிய முதலீடுகளில் முதலீடு செய்ய வேண்டாம். பணம் அல்லது நிலம் தொடர்பான நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் இருந்தால், உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். இதன் காரணமாக வார இறுதியில் உங்களுக்கு பணம் கிடைக்கலாம். இதனால் மோசமான நிதி நிலைமை சரியான பாதையில் திரும்பும்.
குடும்ப உறவுகள்:
இந்த வாரம் குடும்ப உறவுகளில் நீங்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வார்த்தைகள் அல்லது வேலைகளால் குடும்ப உறவுகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே வார்த்தைகளில் கவனம் தேவை. உங்கள் வேலையில் இருந்து சிறிது நேரத்தை ஒதுக்கி குடும்பத்திற்காக செலவிடுங்கள். குடும்பத்தினரின் தேவைகளை புரிந்து கொள்ள முயற்சிப்பது நல்லது.
தொழில்:
கவனக்குறைவு காரணமாக பணியிடத்தில் சில முக்கியமான ஆவணங்களை நீங்கள் இழக்க நேரிடலாம். இதன் காரணமாக பணியில் உங்களுக்கு கெட்ட பெயர் ஏற்படலாம். எனவே மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டும். மூத்த அதிகாரிகள் உங்கள் பொறுப்பை உங்களிடம் இருந்து எடுத்து வேறு ஒருவரிடம் ஒப்படைக்க வாய்ப்பு உள்ளது. ஐடி, ஃபேஷன், மருத்துவம், சட்டம், வடிவமைப்பு துறைகளில் உள்ளவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கல்வி:
மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமான சூழல் இல்லை. மனம் குழப்பமடையக் கூடும். பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் கவனச் சிதறல்கள் ஏற்படக்கூடும். பாடங்களை புரிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படும். கவனத்துடன் படித்தால் தேர்வுகளில் நிச்சயம் வெற்றி பெறலாம். ஆசிரியர் அல்லது பிற மாணவர்களின் உதவியை நாடி பாடங்களை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.
பரிகாரம்:
இந்த வாரம் தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது உங்கள் மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். ஆஞ்சநேயர் வழிபாடு தன்னம்பிக்கையைத் தரும். ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அல்லது வடை மாலை சாற்றி வழிபடுங்கள். ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் அல்லது உதவிகள் செய்யுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
