Thulam Rasi Weekly rasi palan: துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 22 முதல் செப்டம்பர் 28 வரையிலான காலக்கட்டம் எப்படி இருக்க போகிறது என்பது குறித்த வாராந்திர ராசிப் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
பொதுவான பலன்கள்:
துலாம் ராசி நேயர்களே இந்த வாரம் உங்களுக்கு சில முக்கியமான மாற்றங்களையும், சவால்களையும் கொண்டு வரக்கூடும். இந்த வாரம் உங்கள் நிதி நிலைமை சீராக இருக்கும். குருபகவான் உங்கள் ராசியின் ஒன்பதாவது வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எதிர்காலத்தில் நல்ல லாபத்தை பெறுவீர்கள். முதலீடுகளில் கவனம் செலுத்தலாம். தங்கம், நிலம், வீடு கட்டுதல் போன்ற விஷயங்களில் முதலீடு செய்வதற்கு நல்ல நேரம். தொழில் ரீதியாக நீங்கள் விரும்பிய வெற்றிகளை அடைய வாய்ப்புகள் உண்டு. உங்கள் படைப்புத்திறனை மேம்படுத்துவதன் மூலம் பணியிடத்தில் நல்ல பெயரையும், வெற்றியையும் பெறலாம்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறுப்பினர்களிடம் இந்த வாரம் சில மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களிடம் நீங்கள் எதிர்பார்க்கும் மரியாதையை நீங்களும் திருப்பி அவர்களுக்கு கொடுக்க வேண்டும். இல்லையேல் உறவுகளில் சிக்கல்கள் உண்டாகலாம். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, உறவு மேம்படும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சிறப்பானதாகவே இருக்கும். பெரிய உடல்நலப் பிரச்சனைகள் எதுவும் ஏற்படாது. ஆனால் தேவையில்லாத விஷயங்களைப் பற்றி அதிகமாக சிந்திக்க வேண்டாம். இது மன அழுத்தத்தை ஏற்படுத்தலாம். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள யோகா அல்லது தியானம் போன்ற பயிற்சிகளை செய்வது உங்களுக்கு உதவும். சிறிய உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.
கல்வி:
மாணவர்களுக்கு இந்த வாரம் வெற்றி நிச்சயம். கவனத்துடன் படித்தால் தேர்வுகளில் எளிதாக வெற்றி பெற முடியும். அனைத்தையும் படித்து விட்டோம் என்கிற ஆணவம் இல்லாமல், பாடங்களை புரிந்து கொள்ள மற்றவர்களின் உதவியை நாடலாம். இது உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம்.
பரிகாரம்:
வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமி தாயார் வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். ஏழைகளுக்கு உதவிகள் செய்வது, இயலாதவர்களுக்கு உணவளிப்பது உங்கள் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
