MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Astrology: சூரியனை சந்திக்கும் எமன்.! நவராத்திரி முதல் நாளில் நடக்கும் அதிசயம்.! அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள்!

Astrology: சூரியனை சந்திக்கும் எமன்.! நவராத்திரி முதல் நாளில் நடக்கும் அதிசயம்.! அதிர்ஷ்டம் கொட்டப்போகும் ராசிகள்!

Navapancha Raja Yoga : நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி சிறப்பு வாய்ந்த ராஜயோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக சில ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Sep 21 2025, 10:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
சூரியன் எமன் சந்திப்பு
Image Credit : Asianet News

சூரியன்-எமன் சந்திப்பு

இந்து மதத்தில் அம்பிகையின் 9 வடிவங்களை கொண்டாடும் சிறப்பு வாய்ந்த பண்டிகை தான் நவராத்திரி. இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 2 ஆம் தேதி முடிவடைகிறது. இந்த நவராத்திரி காலத்தில் பல சிறப்பான யோகங்கள் உருவாகி மக்களுக்கு பல நன்மைகளை அளிக்க உள்ளது. கிரகங்களின் ராஜாவான சூரிய பகவான் கன்னி ராசியில் பயணித்து வருகிறார். இவர் நவராத்திரியின் முதல் நாளான செப்டம்பர் 22 ஆம் தேதி மகர ராசியில் இருக்கும் எமனுடன் (ப்ளூட்டோ) இணைந்து சக்தி வாய்ந்த நவபஞ்ச ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
நவபஞ்ச ராஜயோகம்
Image Credit : Asianet News

நவபஞ்ச ராஜயோகம்

வேத ஜோதிடத்தின்படி சூரியன் தற்போது கன்னி ராசியின் லக்னத்திலும், மகர ராசியின் ஒன்பதாவது வீட்டிலும் இருக்கிறார். எமன் மகர ராசியில் இருக்கும் பொழுது, கன்னி ராசியின் ஒன்பதாவது வீட்டில் இருக்கிறார். இவ்வாறு கிரகங்கள் ஒன்றாவது வீடு மற்றும் ஒன்பதாவது வீடுகளில் இருந்தால் நவபஞ்ச ராஜயோகம் உருவாகும். இந்த யோகம் மூன்று ராசிகளுக்கு பல நன்மைகளை அள்ளி வழங்க உள்ளது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

35
மகரம்
Image Credit : AI Generated

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச யோகம் பல நன்மைகளை வழங்க உள்ளது. இந்த யோகத்தால் வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பல சவால்கள் நீங்கக் கூடும். மாணவர்கள் தேர்வில் பல வெற்றிகளை ஈட்டலாம். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு வெற்றிகள் சாத்தியமாகும். உயர் கல்வியை தொடர வேண்டும் என்று நினைப்பவர்களின் கனவு நினவாகலாம். 

இந்த காலகட்டத்தில் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், அமைதியும் நிறைந்திருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். செல்வம் அதிகரிப்பதற்கான வாய்ப்பு உண்டு. வணிகத்திலும் குறிப்பிட தகுந்த முன்னேற்றம் கிடைக்கும். வருமானத்திற்கான ஆதாரங்கள் விரிவடையும். லாபம் அதிகரிக்கும். ஒட்டுமொத்தமாக இந்த யோகம் உங்களுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.

45
தனுசு
Image Credit : AI Generated

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு நவபஞ்ச ராஜயோகம் அனைத்து துறைகளிலும் நன்மையை வழங்கும். தனுசு ராசியின் பத்தாவது வீட்டில் சூரியன் இருக்கிறார். பத்தாவது வீடானது கர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இது தொழில், வேலை, சமூக அந்தஸ்து, நற்பெயர், அதிகாரம் ஆகியவற்றை குறிக்கிறது. எனவே தனுசு ராசிக்காரர்கள் தொழில் சார்ந்த துறைகளில் பல நன்மைகளைப் பெறுவீர்கள். 

வேலை செய்பவர்கள் மகிழ்ச்சியும், திருப்தியும் காண்பீர்கள். அலுவலகத்தில் உங்கள் முயற்சிகள் பாராட்டப்படும். புதிய வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். தொழிலதிபர்கள் புதிய உத்திகள் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். உங்கள் நிதி நிலைமை வலுவடையும். தொழில் போட்டியாளர்களைப் பின்னுக்கு தள்ளி முன்னேறிச் செல்வீர்கள். வசதிகள், ஆடம்பரங்கள் அதிகரிக்கும். பொன், பொருள், நகை, வீடு, மனை, நிலம் வாங்கும் யோகம் உண்டு.

55
கன்னி
Image Credit : AI Generated

கன்னி

கன்னி ராசியின் லக்ன வீட்டில் சூரியன் சஞ்சரிக்கிறார். இதன் காரணமாக கன்னி ராசிக்காரர்கள் பல நேர்மறையான மாற்றங்களை அனுபவிக்க இருக்கிறீர்கள். உங்களுக்கு குறுகிய காலத்தில் பல நல்ல செய்திகள் கிடைக்கக்கூடும். உங்கள் குழந்தைகளிடமிருந்து நல்ல செய்திகளைப் பெறலாம். மேலதிகாரிகள் உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள். அலுவலகத்தில் நீங்கள் முக்கிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபகரமான வாய்ப்புகள் உருவாகும். உங்கள் நிதி நிலைமை எதிர்பாராத அளவு ஸ்திரத்தன்மை அடையும். எதிர்பாராத பண ஆதாயங்கள் கிடைக்கும். புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கடன்கள் அனைத்தும் தீர்ந்து மன நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahu Ketu Transit : சர்ப்பக் கிரக பெயர்ச்சி..ராகு-கேது மாற்றத்தால் வாழ்க்கையில் திடீர் திருப்பம் காணப்போகும் 12 ராசிகள்!
Recommended image2
Guru Chandal Yoga : குரு – கேது சேர்க்கையால் உருவாகும் குரு சண்டாள யோகம்... 12 ராசிகளுக்கும் காத்திருக்கும் அதிரடி பலன்கள்!
Recommended image3
Tri-Kona Rajayoga : அரசு வேலை, வெளிநாடு செல்லும் வாய்ப்பை வழங்கும் திரிகோண யோகம்! அந்த 4 அதிர்ஷ்ட ராசிகள் எவை?
Related Stories
Recommended image1
Astrology: இரண்டு முறை மாறப்போகும் புதன்.! 3 ராசிகளுக்கு வீடு வாங்கும் யோகம் வரப்போகுது.! பொன், பொருள் குவியப் போகுது.!
Recommended image2
Astrology: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப உண்மை விளம்பிகளா இருப்பாங்களாம்.! அடிச்சு கேட்டா கூட பொய் பேச மாட்டாங்களாம்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved