- Home
- Astrology
- Astrology: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப உண்மை விளம்பிகளா இருப்பாங்களாம்.! அடிச்சு கேட்டா கூட பொய் பேச மாட்டாங்களாம்.!
Astrology: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப உண்மை விளம்பிகளா இருப்பாங்களாம்.! அடிச்சு கேட்டா கூட பொய் பேச மாட்டாங்களாம்.!
Zodiac signs always speaks truth: சில ராசிக்காரர்கள் எந்த சூழ்நிலைகளும் உண்மையை மட்டுமே பேசும் குணம் படைத்தவர்களாம். அந்த நான்கு ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

எப்போதும் உண்மையை பேசும் 4 ராசிகள்
மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டிய அடிப்படை குணம் உண்மையை பேசுவது. ஆனால் சிலர் வாயைத் திறந்தாலே சரளமாக பொய் பேசுவார்கள். சிலர் தேவைப்படும் இடங்களில் கூட பொய் பேசத் தெரியாமல் உண்மைகளை உளறி சிக்கலிலும் மாட்டிக் கொள்வது உண்டு. சில ராசிக்காரர்கள் எத்தகைய சூழலானாலும், விளைவுகளைக் கண்டு பயம் கொள்ளாமல் எப்போதும் உண்மையைப் பேசுபவர்களாக இருப்பார்களாம். அவர்கள் தங்கள் நேர்மை மீது அசைக்க முடியாத உறுதியை கொண்டுள்ளனர். அந்த ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் தைரியம், ஆற்றல், தன்னம்பிக்கை நிறைந்தவர்கள். இவர்கள் போர் கிரகமான செவ்வாய் பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் உண்மையை எந்தவித தயக்கமும் இன்றி வெளிப்படையாக பேசுவார்கள். இவர்களுக்கு மன எண்ணங்களை மறைக்கத் தெரியாது. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசமாட்டார்கள். மனதில் பட்டதை அப்படியே பேசி விடுவார்கள். இவர்களின் நேரடியான பேச்சு சில சமயங்களில் கடுமையாக தோன்றினாலும் இவர்களின் நோக்கம் எப்போதும் நல்லதாகவே இருக்கும். இவர்களின் வெளிப்படையான பேச்சு மற்றவர்களுக்கு காயங்களை ஏற்படுத்தினாலும், நேர்மையான உறவுகளை உருவாக்குவதற்கு உண்மை அவசியம் என்று அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் புதன் கிரகத்தால் ஆளப்படுபவர்கள். இவர்கள் பகுத்தறிவுடன் சிந்திப்பவர்கள். தன்னைச் சுற்றி நடக்கும் அனைத்து விஷயங்களையும் கூர்மையாக கவனிப்பார்கள். ஒரு விஷயத்தை பிறருக்கு தெரியப்படுத்தும் பொழுது அந்த விஷயத்தின் பொருள் மாறாமல் அப்படியே கூறுவார்கள். இவர்கள் தங்கள் உண்மையையும், நேர்மையையும் பெரிதும் மதிக்கின்றனர். பிறர் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று அவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி விடுவார்கள். விளைவுகளைப் பற்றி இவர்கள் யோசிப்பதில்லை. உண்மையுடனும், நேர்மையுடனும் இருப்பதே தனிப்பட்ட வளர்ச்சிக்கு உதவும் என்பதை அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் குரு பகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் வெளிப்படையானவர்கள் மற்றும் எதையும் நேரடியாக பேசுவதில் வல்லவர்கள். தனுசு ராசியை சேர்ந்தவர்கள் சுதந்திரமான மனநிலை கொண்டவர்கள். எந்த ஒரு சூழலிலும் அவர்கள் உண்மையை வெளிப்படுத்த தயங்குவதில்லை. பிறர் என்ன நினைத்துக் கொள்வார்களோ, அதனால் ஏதேனும் சங்கடம் ஏற்படுமோ என்று கவலைகள் இவர்களுக்கு கிடையாது. இவர்களின் நேர்மையான அணுகுமுறை மற்றவர்களுக்கு உத்வேகம் அளிக்கும். ஆனால் சில சமயங்களில் இவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை புண்படுத்தலாம். இருப்பினும் உண்மையும் நேர்மையுமே வாழ்வில் ஒருவரை வெற்றி பெறச் செய்யும் என்ற கொள்கை கொண்டுள்ளதால், தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுவதற்கு இவர்கள் தயங்குவதில்லை.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனிபகவானால் ஆளப்படுபவர்கள். இவர்கள் ஒழுக்கமானவர்கள் மற்றும் கட்டுப்பாடு மிக்கவர்கள். இவர்கள் நேர்மை மற்றும் உண்மையை உயர்ந்த குணங்களாக கருதுகின்றனர். நேர்மையுடனும் உண்மையுடனும் இருப்பதே தங்கள் நற்பெயருக்கு நன்மை தரும் என்று அவர்கள் உறுதி கொண்டுள்ளனர். இவர்களின் நேர்மையான பேச்சு சில சமயங்களில் தீவிரமாக இருக்கலாம். ஆனால் அவர்களின் நோக்கம் எப்போதும் நியாயத்தை நிலை நாட்டுவதாக இருக்கும். இவர்கள் எப்போதும் உண்மைகளை நேருக்கு நேர் எதிர் கொண்டு எதார்த்தமாக இருக்க விரும்புகின்றனர். எந்த உறவானாலும் நம்பிக்கை மற்றும் மரியாதை வேண்டுமென்றால் நேர்மை அவசியம் என்பதை அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)