Today Rasi Palan : செப்டம்பர் 26, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

பொதுவான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்று உங்கள் உள்ளுணர்வை நம்பி செயல்படுவது நல்லது. இன்று உங்கள் உள்ளுணர்வு வலுவாக இருக்கும். வேலை மற்றும் கடமைகளில் கவனம் செலுத்துவீர்கள். உங்களை புத்துணர்ச்சியாக விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படுங்கள். அவசரம் வேண்டாம். நேர்மையுடன் செயல்படுங்கள் பிறரை நம்ப வைப்பதற்காக நடிக்க தேவையில்லை.

நிதி நிலைமை:

நிதி விஷயங்களைப் பொறுத்தவரை இன்று மாலைக்குள் அல்லது நாளைக்குள் நல்ல செய்திகள் வந்து சேரலாம். பழைய கடன் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே செலவுகளை கண்காணித்து செய்ய வேண்டும். பெரிய முதலீடுகள் அல்லது அபாயகரமான முடிவுகளை தவிர்ப்பது நல்லது. நிதி ஸ்திரத்தன்மை மற்றும் நடைமுறை திட்டங்களில் கவனம் செலுத்துங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

துணையுடன் உணர்ச்சிப்பூர்வமான நல்லிணக்கம் காணப்படும். மனம் திறந்து பேசுவதன் மூலம் சிறிய குழப்பங்கள் நீங்கும். ஆழமான தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு மனம் விட்டு பேசுங்கள். உங்கள் அன்புக்குரியவர்களின் உண்மையான உணர்வுகளை புரிந்து கொண்டு, அதற்கு ஏற்ப செயல்படுங்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவது பிணைப்பை அதிகப்படுத்தும். சிறிய அன்பான செயல்கள் நம்பிக்கை மற்றும் அன்யோன்யத்தை அதிகரிக்கும்.

பரிகாரங்கள்:

உங்கள் ராசியின் அதிபதியாக விளங்கும் சனி பகவானை வழிபடுங்கள். வயதான ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள். இன்று ஏற்படும் தடைகளில் இருந்து விடுபடுவதற்கு பைரவரை வழிபடுங்கள்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.