- Home
- Astrology
- ராகு பெயர்ச்சி: 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நட்சத்திரம் செல்லும் ராகு.! கோடிகளை வாரி சுருட்டப் போகும் 3 ராசிகள்.!
ராகு பெயர்ச்சி: 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த நட்சத்திரம் செல்லும் ராகு.! கோடிகளை வாரி சுருட்டப் போகும் 3 ராசிகள்.!
Rahu Peyarchi 2025: 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு பகவான் தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ராகு பெயர்ச்சி 2025
ஜோதிட சாஸ்திரங்களின்படி ராகு நிழல் கிரகமாக அறியப்படுகிறார். ராகு எப்போதும் பின்னோக்கி நகர்ந்து, ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ராசியை மாற்றுகிறார். ராகுவின் நட்சத்திர மாற்றம் மிகவும் அதிர்ஷ்டானதாகவும், அதே சமயம் சிறப்பு வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. இந்த ஆண்டு நவம்பர் 2025 இல் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி தனது சொந்த ராசியான சதய நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். ராகு பகவான் தனது சொந்த ராசிக்கு வருவது முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. இது பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கிறது. ராகுவின் இந்த நட்சத்திரப் பெயர்ச்சி 12 ராசிகளிலும் பெரிய மாற்றங்களை கொண்டு வரவுள்ளது. இருப்பினும் மூன்று ராசிக்காரர்கள் நல்ல பலன்களை அடைய உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
சதய நட்சத்திரத்திற்குள் ராகு பகவானின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு பல்வேறு வழிகளில் நன்மை பயக்க உள்ளது. அவர்கள் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் முன்னேற்றம் அடையுள்ளனர். தொழிலில் பதவி உயர்வுகளைப் பெற உள்ளனர். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். வேலை அல்லது வணிகத்தில் பெரிய முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிபடையும். செல்வாக்கு அதிகரிக்கும். பொருளாதார நிலை மேம்படும். படைப்பாற்றல் மற்றும் சிந்தனைத் திறன் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படலாம். உங்கள் தந்தையுடன் உறவு வலுவடையும். சிலர் மூதாதையர் சொத்துக்களையும் பெற வாய்ப்பு உள்ளது.
கடகம்
சதய நட்சத்திரத்திற்குள் ராகுவின் வருகையானது, கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். கடக ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் பெரும் நன்மைகளை பெறுவார்கள். இந்த காலகட்டத்தில் அவர்களின் புகழ் அபரிமிதமாக அதிகரித்து உச்சத்தை அடையும். உங்களின் ஆளுமை காரணமாக மக்கள் உங்கள் பக்கம் ஈர்க்கப்படுவார்கள். எங்கு சென்றாலும் உங்களுக்கு தனி மரியாதை கிடைக்கும்.
தைரியம் மற்றும் தன்னம்பிக்கை கணிசமாக உயரும். உங்கள் தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் புதிய வெற்றிகளுக்கான வழிகள் திறக்கப்படும். வாழ்க்கைத் தரம் மேம்படும். குடும்பத்தில் ஆரோக்கியத்துடன், மன அமைதியும், மன மகிழ்ச்சியும் நிலவும். ஒட்டுமொத்தமாக இந்த காலத்தில் நீங்கள் மிகவும் திருப்திகரமாக உணர்வீர்கள்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியான சனி பகவானுக்கும், ராகு பகவானுக்கும் இடையே நட்பு உணர்வு நிலவுகிறது. ராகு தனது சொந்த நட்சத்திரமான சதயத்திற்கு வருவது கும்ப ராசிக்கும் பலன்களை வழங்க உள்ளது. கும்ப ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்திற்கு பின்னர் வாழ்வில் மிகப்பெரிய மாற்றங்களை காண்பீர்கள். நிதி ரீதியாக நல்ல பலன்களை அனுபவிக்கலாம்.
புதிய மூலங்களில் இருந்து பணம் கிடைக்கும். பழைய கடன் பிரச்சனைகள் தீர்க்கப்படும். காதல் தொடர்பான சிக்கல்களும் தீர்ந்து, மகிழ்ச்சி ஏற்படும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். சமூகத்தில் உங்களுக்கென அடையாளம் உருவாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)