Today Rasi Palan : அக்டோபர் 07, 2025 தேதி கும்ப ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

பொதுவான பலன்கள்:

  • கும்ப ராசி நேயர்களே, இன்றைய நாள் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். 
  • உங்கள் இலக்குகளை நோக்கி செயல்பட அமைதியான மனநிலையும், கவனமும் கிடைக்கும். 
  • உங்கள் மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, ஆக்கபூர்வமுடன் செயல்படுவீர்கள். 
  • கூட்டு முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். 
  • கடின உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். 
  • புதிய திட்டங்கள் மற்றும் தேவையற்ற செலவுகளை தள்ளிப் போடுவது நல்லது. 
  • அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்.

நிதி நிலைமை:

  • நிதி நிலைமை இன்று நன்றாக இருக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். 
  • குறிப்பாக பால் தொழில் அல்லது கூட்டாக வணிகம் செய்பவர்களுக்கு நிதி ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. 
  • வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். பெரும்பாலும் இவை சுபச் செலவுகளாக இருக்கும். 
  • கடன் விவகாரங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். 
  • ஆடம்பரப் பொருட்களை வாங்குவதற்கு முன்னரோ அல்லது முதலீடு செய்வதற்கு முன்னரோ அனுபவம் வாய்ந்தவர்களின் ஆலோசனையைக் கேட்டு செயல்படுங்கள்.

தனிப்பட்ட வாழ்க்கை:

  • குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை உறவிலிருந்த சிக்கல்கள் தீர்ந்து, மகிழ்ச்சி உண்டாகும். 
  • வாழ்க்கைத் துணையுடன் இணக்கமான சூழல் நிலவும். 
  • குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுவீர்கள். 
  • அதிகமாக பேசுவதை குறைத்து, அன்பை காட்டுவது உறவை மேம்படுத்தும். 
  • முதுகெலும்பு மற்றும் கழிவுப் பாதை தொடர்பான ஆரோக்கிய சிக்கல்கள் ஏற்படலாம். எனவே கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.

பரிகாரங்கள்:

  • இன்று வரும் சவால்களை சமாளிப்பதற்கு சிவபெருமான் அல்லது மகாலட்சுமி தாயாரை வழிபடுங்கள். 
  • குடும்ப வாழ்க்கையை மேம்படுத்த குரு யந்திரத்தை பூஜை அறையில் வைத்து வழிபடுங்கள். 
  • எதிரிகளின் சதியில் இருந்து விடுபட துர்க்கை அம்மனை வணங்குங்கள். 
  • ஏழை எளியவர்களுக்கு முடிந்த உதவிகளை செய்யுங்கள்.

முக்கிய குறிப்பு:

  • இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.