- Home
- Astrology
- Astrology: இந்த 4 ராசி ஆண்களுக்கு பிறந்த மகள்கள் ரொம்ப அதிர்ஷ்டக்காரங்க.! வீட்டுல ராணி மாதிரி வளருவாங்களாம்.!
Astrology: இந்த 4 ராசி ஆண்களுக்கு பிறந்த மகள்கள் ரொம்ப அதிர்ஷ்டக்காரங்க.! வீட்டுல ராணி மாதிரி வளருவாங்களாம்.!
Zodiac signs treat their daughters like Queen: சில ராசிகளில் பிறந்த ஆண்கள் தங்களுக்குப் பிறக்கும் மகள்களை ஒரு ராணி போலவோ அல்லது இளவரசி போலவோ வளர்க்கிறனர். அந்த ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மகள்களை ராணி போல நடத்தும் ஆண்கள்
ஜோதிடத்தின் படி ஒவ்வொரு ராசிகளுக்கும் தனித்துவமான ஆளுமை மற்றும் குணாதிசயங்கள் உண்டு. ஒவ்வொரு தந்தையும் தனது மகளை ராணி போல வளர்க்க விரும்புகின்றனர். ஆனால் ஜோதிடத்தின் படி சில ராசி ஆண்கள் தங்கள் மகள்களை மிகவும் அன்புடனும், பாசத்துடனும், பாதுகாப்புடனும் நடத்துவதில் தனித்து விளங்குகின்றனர். இவர்கள் தங்கள் மகள்கள் மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளனர். இந்தக் கட்டுரையில் மகள்களை ராணியைப் போல நடத்தும் நான்கு ஆண்களின் ராசிகளைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
கடகம்
- கடக ராசியில் பிறந்தவர்கள் சந்திர பகவானால் ஆளப்படுபவர்கள்.
- இவர்களுக்கு இயல்பிலேயே குடும்பத்துடனான பிணைப்பு, உணர்ச்சி ஆழம் அதிகம்.
- கடக ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் குடும்பத்தை மையமாகக் கொண்டவர்கள்.
- இவர்கள் தங்கள் மகள்களை மிகவும் பாசத்துடனும், அக்கறையுடனும் நடத்துகிறார்கள்.
- இவர்கள் மகள்களுக்கு பாதுகாப்பான மற்றும் அன்பான சூழலை உருவாக்குவதில் திறமையாளர்களாக விளங்குகிறார்கள்.
- மகள்களின் உணர்ச்சியை புரிந்து கொள்வதிலும், அவர்களின் மகிழ்ச்சி, துக்கம், கனவுகளை உணர்ந்து அதற்கு ஏற்ப ஆதரவளிப்பாளர்கள்.
- மகள்களுக்கு என சிறிய நேரத்தை ஒதுக்கி அவர்களுடன் தரமான நேரத்தை செலவிடுவார்கள்.
- மகளின் சிறு வெற்றியைக் கூட கொண்டாடுவார்கள்.
சிம்மம்
- சிம்ம ராசியில் பிறந்த ஆண்கள் இயற்கையாகவே தங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்புவார்கள்.
- தங்கள் மகள்களை ஒரு ராணியைப் போல நடத்த வேண்டும் என்று நினைப்பார்கள்.
- தங்கள் மகள்களின் தன்னம்பிக்கையை வளர்க்க பெரிதும் உதவுவார்கள்.
- இவர்கள் தங்கள் மகள்களை உலகின் முதல் பொருட்டாக கருதுவார்கள்.
- எப்போதும் தங்கள் மகள் சமூகத்தில் ஒளிர வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவார்கள்.
- இதன் காரணமாக சிறிய பொருளாக இருந்தாலும் அதில் சிறந்தவற்றையே வழங்குவார்கள்.
- ஆடம்பர பரிசுகள் முதல் உணர்ச்சிபூர்வமான ஆதரவு வரை அனைத்துமே சிறப்பானதாகவே இருக்கும்.
துலாம்
- துலாம் ராசியில் பிறந்த ஆண்கள் மிகவும் நியாயவாதிகளாக இருப்பார்கள்.
- இவர்கள் தங்கள் மகள்களை மிகவும் நாகரிகமாகவும், மரியாதையுடனும் நடத்துவார்கள்.
- தங்கள் மகள்களுக்கு அன்பையும், மரியாதையும், சமநிலையும் கற்றுக் கொடுப்பார்கள்.
- மகள்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களின் விருப்பங்களை உடனுக்குடன் நிறைவேற்றுவார்கள்.
- மகள்களுக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்குவார்கள்.
- தங்கள் பிள்ளைகளுக்கு கலை மற்றும் நாகரீகத்தை சொல்லிக் கொடுப்பார்கள்.
- எப்போதும் மகள் சார்ந்த விஷயங்களில் சமநிலையான மற்றும் அமைதியான சூழலை உருவாக்குவார்கள்.
மீனம்
- மீன ராசிக்காரர்கள் பொதுவாக கனவு காண்பவர்கள் மற்றும் உணர்ச்சிமிக்கவர்கள்.
- மீன ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் மகள்களுக்கு என ஒரு மாயாஜால உலகத்தை உருவாக்குவார்கள்.
- அந்த உலகில் தனது மகளை ராணியாக வைத்து அழகு பார்ப்பார்கள்.
- தங்கள் மகள்களின் கற்பனை மற்றும் கனவுகளை ஊக்குவிப்பதிலும் இவர்கள் திறமையானவர்கள்.
- மகள்களின் உணர்ச்சிகளை ஆழமாக புரிந்து கொண்டு அவர்களுக்கு உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவார்கள்.
- மகள்களின் கனவை நினைவாக்குவதற்கு எப்போதும் தயாராக இருப்பார்கள்.
- மகள்களின் ஒவ்வொரு செயல்களையும் ஊக்குவித்து அவர்களுக்கு என ஒரு உலகத்தை உருவாக்கித் தருவார்கள்.
நீங்களும் சிறந்த தந்தை தான்.!
மேற்குறிப்பிட்ட ராசியில் பிறந்த ஆண்கள் தங்கள் மகள்களை ஒரு ராணியைப் போல நடத்துவதில் தனித்து விளங்குகின்றனர். இவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் மகள்களுக்கு அன்பு, பாதுகாப்பு, மரியாதை மற்றும் மகிழ்ச்சியை வழங்குவதில் தனிப்பட்ட முறையை கையாளுகின்றனர். எந்த ராசிகாரர்களாக இருந்தாலும் சரி குழந்தைகளின் மனதை புரிந்து கொண்டு, அவர்களுக்கு ஏற்ற விஷயங்களை செய்தால் ஒவ்வொரு தந்தையும் சிறப்பானவராக மாற முடியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)