நீங்கள் இந்து மதத்தை பின்பற்றுபவரா? அப்ப மறந்தும் கூட 'இந்த' தவறை செய்யாதீங்க..!!
இந்து மதத்தை பின்பற்றுவோர் ஆன்மீகத்தில் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.
இந்து மதத்தில் பலவிதமான சாஸ்திர சம்பிரதாயங்கள் உள்ளன. அந்த வகையில் இந்து மதத்தை பின்பற்றுவோர் இந்த சாஸ்திர சம்பிராதயங்களை முறையாக பின்பற்றினால் அவர்களது வாழ்க்கை நன்றாக இருக்கும். அதன்படி இந்து மதத்தை பின்பற்றுவோர் ஆன்மீகத்தில் செய்யக்கூடாத சில விஷயங்கள் உள்ளன அது என்னவென்று இங்கு பார்க்கலாம்.
இதையும் படிங்க: யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவது ஏன்? ஆன்மிகக் காரணங்கள் இதோ..!!
- கடவுளுக்கு எடுக்கும் ஆரத்தியில் ஒருபோதும் சுண்ணாம்பு சேர்க்கக் கூடாது. அதுபோல் அர்ச்சனைப் பொருட்களை இடது கையால் எடுத்துச் செல்லவேக் கூடாது.
- மேலும் திருப்பதி, திருத்தணி, பழநி, திருச்செந்தூர் போன்ற கோயில்களுக்கு நீங்கள் சென்றால் அங்கிருந்து உங்கள் வீட்டிற்குத் தான் செல்ல வேண்டும். மறந்தும் கூட வழியில் வேறு எங்கும் செல்ல வேண்டாம்.
- அதுபோல் நீங்கள் கழுத்தில் ருத்ராட்சம் அணிந்திருந்தால் இறுதிச் சடங்குகளுக்குச் செல்லும் போது அதை கழற்றி விட்டு செல்லுங்கள்.
- வீட்டில் ஒருபோதும் சனி பகவானுக்கு எள் விளக்கு ஏற்ற வேண்டாம். மேலும் எலுமிச்சம் பழத்தில் தீபம் ஏற்றவும் கூடாது.
- நீங்கள் கோவிலிலிருந்து வீட்டிற்கு வந்ததும் கை, கால்களை சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். ஒருபோதும் குளிக்காதீர்.
- அதுபோலவே, உங்கள் முன்னோர்களின் படங்களையும், கடவுளின் படங்களையும் ஒன்றாக வைத்து வணங்க கூடாது. மேலும் வீட்டில் பூஜையறையில் வடக்குப் பார்த்து கடவுள்களை வைக்கக் கூடாது.
- நீங்கள் உங்கள் வீட்டில் ஒருபோதும் புல்லாங்குழல் ஊதும் தனி கிருஷ்ணன் படம், விக்கிரகம், காலண்டர் ஆகியவற்றை வைக்க வேண்டாம். அதற்கு பதிலாக பசுக்களோடு உள்ள மற்றும் ராதையுடன் கூடிய புல்லாங்குழல் ஊதும் கிருஷ்ணன் படத்தை வைக்கலாம்.
- மேலும் சிதறு தேங்காயை கர்ப்பிணிப் பெண்களோ அல்லது அவர் கணவரோ ஒருபோதும் உடைக்கக்கூடாது.
- நீங்கள் கோவிலுக்குள் செல்லும் முன் கோவில் வாசலில் பிச்சை கேட்பவர்களுக்கு கண்டிப்பாக தானம் செய்ய வேண்டும். ஏனெனில் அந்த தானம் தர்ம பலனுடன் தான் கடவுளின் சன்னதியை அடைய வேண்டும். ஒருவேளை நீங்கள் கோவிலுக்குச் சென்று கடவுளை தரிசித்து விட்டு வந்து தானம் செய்தால் அது எவ்வித பலனையும் அளிக்காது.
- அதுபோல் கடவுளின் சன்னிதியில் நின்று யோசித்தால் உங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். குறிப்பாக சுப காரியங்கள் பற்றிப் பேசும் போது, ஒருபோதும் எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசவே வேண்டாம். இதனால் உங்கள் சுபம் காரியங்கள் தடைபடலாம்.
இதையும் படிங்க: இதுக்குதான் ஆரத்தி எடுக்காங்களா...அப்ப திருஷ்டிக்காக இல்லையா?