யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவது ஏன்? ஆன்மிகக் காரணங்கள் இதோ..!!
யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவது ஏன்? அதற்கு பின்னால் உள்ள ஆன்மிகக் காரணங்கள் என்ன என்பதை குறித்து இங்கு பார்க்கலாம்.
யானைகளுக்கு, காட்டை உருவாக்குவதில் மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம்! யானைகள் ஒவ்வொரு நாளும் தங்கள் உணவைத் தேடி பல கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்கிறது. அப்போது வழியில் அவைகள் மரம், செடி, கொடி, காய், பழங்கள் என அனைத்தையும் உண்கின்றன. உணவிற்காக நடந்து கொண்டே இருக்கும் யானைகள் போடக்கூடிய எச்சத்திலிருந்து பல விதைகள் முளைத்து மீண்டும் மரமாகிறது. எனவே,தான் இவை காடுகளை உருவாக்க முக்கிய காரணமாகிறது. அதுபோல் யானை மிகவும் தெய்வீக அம்சங்கள் கொண்டது.
பல அதிசயத்தக்க விஷயங்கள்:
- யானையிடம் பல அதிசயத்தக்க விஷயங்கள் உள்ளது. அவற்றில் ஒன்று மிகவும் முக்கியமானது. அது என்னவென்றால், யானைகள் ஒரே நேரத்தில் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாக சுவாசிக்கக்கூடிய தன்மை உடையது. இந்த தன்மை யானைகளுக்கு மட்டுமே உண்டு. ஏன், மனிதர்களுக்கு கூட இல்லை.
- ஒரே நேரத்தில் அல்லது எப்போதும் இரண்டு நாசித் துவாரங்கள் வழியாகவும் சுவாசிக்கும் ஆற்றலைக் கொண்டது யானைகள். இதற்கு சுழுமுனை வாசி யோகம் என்று பெயர்.
- அப்படிப்பட்ட சுழுமுனை வாசி யோகம் உள்ள யானைகள் அதன் தும்பிக்கையை நம் தலையில் தொட்டு ஆசி வழங்கும் போது நமக்கு மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
- இப்படிப்பட்ட தெய்வீக தன்மை பொருந்திய யானைகளிடம் ஆசி பெறுவதால் நமக்கும் தெய்வீக அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.