Asianet News TamilAsianet News Tamil

இதுக்குதான் ஆரத்தி எடுக்காங்களா...அப்ப திருஷ்டிக்காக இல்லையா?

இந்து மததில் ஆரத்தி எடுப்பது வழக்கம். ஆனால் இது ஏன் என்று பலருக்கு தெரியாது. இதற்கு பின்னால் உள்ள பல அறிவியல் காரணங்களும் உண்டு.  அது என்னவென்று உங்களுக்கு தெரியுமா?

know why hindu people taken aarati science reasons here
Author
First Published Aug 26, 2023, 5:21 PM IST

இந்து திருமணத்தில் மணமக்கள் வீட்டிற்கு வரும் போது அவர்களுக்கு அரத்தி எடுத்து வரவேற்பது காலம் காலமாக  செய்து வருகின்றனர். ஆனால் பலருக்கு இப்படி ஆரத்தி எடுக்கப்படுவது ஏன்? என்று இன்றும் வரை தெரியவில்லை. பலரோ இது திருஷ்டி கழிப்பதற்கான ஒரு சம்பிரதாயம் என நினைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது உண்மை இல்லை. மேலும் இதற்கு பல அறிவியல் காரணங்களும் உண்டு. 

ஆரத்தி எடுப்பதற்கான காரணம்?
பொதுவாகவே, ஆரத்தி எடுப்பதற்கான காரணம் என்னவென்றால், திருமணமான தம்பதியினருக்கு தீய சக்தியினால் தீமைகள் ஏதும் ஏற்படாமல் இருக்கவும், அவர்களுக்கு கண் திருஷ்டி ஏதேனும் பட்டால் அதனை நீக்கவும் ஆரத்தி எடுக்கப்படுகிறது.

இதையும் படிங்க:  யானையிடம் ஆசீர்வாதம் வாங்குவது ஏன்? ஆன்மிகக் காரணங்கள் இதோ..!!

ஆரத்தி எடுப்பதற்கான முக்கிய நோக்கம்?
ஆரத்தி என்பது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரங்களில் ஒன்று ஆகும். மேலும் பல்வேறு சடங்கு சம்பிரதாயங்களில் ஆரத்தி எடுப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதுபோல் 
ஆரத்தி எடுத்தால் கண் திருஷ்டி நீங்கும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லிவிட்டு சென்றனர். குறிப்பாக, ஆரத்தி எடுப்பதற்கான முக்கிய நோக்கம் என்னவென்றால், நாம் எந்த நபருக்கு ஆரத்தி எடுக்கிறோமோ அவருக்கு லட்சுமி மற்றும் சரஸ்வதியின் அருள் கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்.

ஆரத்தி எப்போதெல்லாம் எடுக்கபடுகிறது?
பொதுவாகவே ஆரத்தியை தூரப் பிரயாணம் பண்ணி வீடு திரும்புவோருக்கு, புதிதாக திருமணமான தம்பதியினருக்கு, குழந்தை பெற்று வீட்டுக்கு வரும் அப்பெண் மற்றும் அந்த குழந்தைக்கு,  மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று வீடு திரும்புவோருக்கு ஆரத்தி எடுக்கபடுகிறது.

ஆரத்தி எப்படி எடுக்க வேண்டும்?
ஆரத்தி எடுக்க முதலில் தாம்பாளத் தட்டில் மஞ்சள் மற்றும் சுண்ணாம்பும் எடுத்து கொள்ளுங்கள். பின் அவற்றை  தண்ணீர் விட்டு நன்கு கலக்கி கொள்ளுங்கள். அப்படி கலக்கும் போது அவை சிவப்பு நிறமாக மாறும். பின் அவற்றின் மீது ஒரு வெற்றிலை வைத்து அதன் மேல் கற்பூரத்தை ஏற்றி ஆரத்தி எடுக்க போகும் நபருக்கும் முன்  3 முறை சுற்ற வேண்டும். இதுவே ஆரத்தி எடுப்பதற்கான முறையாகும். பின் அவற்றை யாருடைய காலில் படாதவாறு ஒரு இடத்தில் கொட்டி விடவும்.

ஆரத்தியில் மஞ்சள், சுண்ணாம்பு வைப்பது ஏன்?
இவை இரண்டுக்கும் கிருமிகளை அழிக்கக் கூடிய சக்தி உண்டு. இவற்றை பயன்படுத்துவதன் மூலம் நம் உடலிலுள்ள உள்ள கண்ணுக்கு தெரியாத விஷ கிருமிகளை அழிக்க உதவுகிறது. 

இதையும் படிங்க: பெண்கள் அரச மரத்தை சுற்றி வருவது ஏன் தெரியுமா? சுற்றினால் இந்த தோஷம் நீங்கும்..!!

ஆரத்தியை வாசலில் வைத்து  எடுப்பது ஏன்?
வெளியில் இருந்து வருவோருக்கு உடலில் பல நச்சு கிருமிகள் தொற்றி இருக்கும். அவர்கள் வீட்டிற்குள் வந்தால் அவை பரவு வாய்ப்பு அதிகம். எனவே தான் வாசலில் வைத்து ஆரத்தி எடுக்கின்றனர். மேலும் இதுவே ஆரத்தி எடுப்பதற்கு பின்னால் உள்ள அறிவியல் காரணம் ஆகும்.

Follow Us:
Download App:
  • android
  • ios