vuukle one pixel image

ஷாருக்கானின் பர்த்டே ட்ரீட்... அதிரடி ஆக்‌ஷனுடன் ரிலீசான ‘பதான்’ படத்தின் மாஸான டீசர் இதோ

Ganesh A  | Published: Nov 2, 2022, 11:46 AM IST

பாலிவுட் திரையுலகின் பாட்ஷாவாக வலம் வரும் , இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வந்தாலும், மறுபுறம் அவர் நடிக்கும் படங்கள் குறித்த அப்டேட்டும் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. பதான் படத்தை சித்தார்த் ஆனந்த் இயக்கி உள்ளார். இப்படத்தில் ஷாருக்கான் உடன் தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது.

ஷாருக்கானின் பிறந்தநாள் விருந்தாக ரிலீசாகி உள்ள பதான் படத்தின் டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக பாராட்டுக்களும் கிடைத்து வருகின்றன. பதான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25-ந் தேத் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஈஃபில் டவர் முன் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்... வருங்கால கணவருடன் ரொமான்ஸ் செய்த ஹன்சிகா - வைரலாகும் போட்டோஸ்