
இன்றைய இளைஞர்கள் நமது கலாச்சார பெருமையை பற்றிய அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் வீடியோ மூலம் பேசினார்.அப்போது இளைஞர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார். அப்போது பேசிய அவர், “செல்போன் யுகத்தில் இளைஞர்கள் பாரத நாட்டின் கலாச்சாரம் பெருமைகள் தெரியாமல் உள்ளனர். இன்றைய இளைஞர்கள் நமது கலாச்சார பெருமையை பற்றிய அறிவில்லாமல் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்கள்.மேற்கத்திய நாட்டு மக்கள் அவர்களது கலாச்சாரத்தில் நிம்மதி கிடைக்கவில்லை என இந்தியா வருகிறார்கள். நாட்டின் உன்னதமான கலாச்சாரம் இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.