கோவை, தொண்டாமுத்தூர் அருகே உள்ள பொம்மனம்பாளையம் பகுதியில் ரவி என்பவர் தோட்டம் பகுதியில் நேற்று நள்ளிரவு உணவு தேடி ஒரு ஒற்றைக் காட்டு யானை வந்தது. இதை கண்காணிப்பு கேமரா மூலம் கவனித்த அவர் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அங்கு வந்த வனத் துறையினர் யானையை வனப் பகுதிக்குள் விரட்டினர். அப்பொழுது சாப்பிட ஒன்றும் கிடைக்காததால் சோகத்தில் நடந்து செல்வது போன்று சென்றது. அதனை காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. பின் தொடர்ந்து வந்த வனத் துறையினர் . யானை வனப்பகுதிக்குள் சென்றதை கண்காணித்தனர், வனத் துறையினரின் முயற்சியால் எந்த வித சேதமும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.