
தமிழக ஆளுநர் ஆர் என் ரவி நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து தனது குடும்பத்துடன் ஆன்மீக பயணத்தை தொடங்கி திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருவானைக்காவல் உள்ளிட்ட கோவில்களில் சாமி தரிசனம் செய்துவிட்டு ராமேஸ்வரம் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை சாலை மார்க்கமாக ராமேஸ்வரம் வந்தடைந்தார். ராமேஸ்வரம் வந்த தமிழக ஆளுநர் ஆர் என் ரவி ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள நட்சத்திர விடுதியில் குடும்பத்துடன் தங்கினார். பின்னர் இன்று அதிகாலை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கு தனது குடும்பத்துடன் வந்த தமிழக ஆளுநரை திருக்கோயில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் வேதமுழங்க பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்று வரவேற்றனர். திருக்கோவிலிற்கு வந்த தமிழக ஆளுநர் முதலில் ஸ்படிகலிங்க தரிசனத்தில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.