கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம்!

Published : May 30, 2024, 07:21 PM IST

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார்.
 

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மண்டபத்தில் தியானம் செய்ய பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்துள்ளார். தனி விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வந்த அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகை புரிந்தார். பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர், படகு மூலம் கன்னியாகுமரி கடலில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு பிரதமர் மோடி சென்றார். இன்று மாலை முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தொடர்ந்து 3 நாட்களுக்கு விவேகானந்தர் பாறையில் தங்கியிருந்து அங்குள்ள தியான மண்டபத்தில் இரவு பகலாக பிரதமர் மோடி தியானம் மேற்கொள்ளவுள்ளார்.

முன்னதாக, கன்னியாகுமரி வந்தடைந்ததும் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு கடற்கரை அருகே அமைந்துள்ள பகவதி அம்மன் கோயிலில் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிந்து பிரதமர் மோடி சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சுவாமி தரிசனம் செய்த அவருக்கு கோயில் சார்பாக பிரசாதங்கள் வழங்கப்பட்டன. மேலும்,ம் பகவதி அம்மன் புகைப்படமும் பிரதமர் மோடி வழங்கப்பட்டது.

பிரதமரின் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கன்னியாகுமரி முழுவதும் பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!
03:12தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கைப் பதிவு செய்தார்!
05:43வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
03:28தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!
Read more