திருப்பூர் 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை.. அமைச்சர் கீதா ஜீவன்..

திருப்பூர் 3 சிறுவர்கள் உயிரிழப்பு.. காப்பக நிர்வாகிகள் மீது நடவடிக்கை.. அமைச்சர் கீதா ஜீவன்..

Published : Oct 07, 2022, 02:27 PM IST

திருப்பூரில் தனியார் காப்பகத்தில் உணவு அருந்திய பின் உடல்நலக்குறைவு ஏற்பட்டு 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட காப்பகம் மூடப்படும் என்றும் அமைச்சர் கீதான் ஜீவன் தெரிவித்துள்ளார். 

திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் தனியார் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் நேற்று காலை சிற்றுண்டி சாப்பிட்ட சிறுவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து பாதிக்கப்பட்டு 14 மாணவர்கள், திருப்பூர் மற்றும் அவினாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் மூன்று சிறுவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்களை சந்தித்த திருப்பூர் ஆட்சியர், இறந்த மாணவர்களின் உடல் கூராய்விற்கு பின்னர் மரணம் குறித்து காரணம் தெரியவரும் என்று பேட்டியளித்தார்.

மேலும் படிக்க:பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு..? யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் வீட்டில் என்ஐஏ தீவிர சோதனை..

மேலும் திருப்பூர் தனியார் காப்பக மாணவர்கள் இறப்பு குறித்து முழுமையான விவாரணை நடத்த குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் இன்று சம்பந்தப்பட்ட தனியார் காப்பகத்தில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆய்வு மேற்கொண்டார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சிறுவர்கள் உயிரிழந்த காப்பகம் மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது. மேலும் இங்கு பாதுகாப்பு காப்பாளர் யாரும் இல்லாமல் இருந்துள்ளனர். கெட்டுப்போண உணவை தந்தால், 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். 

மேலும் படிக்க:திருப்பூரில் தனியார் ஆதரவற்ற காப்பகத்தில் உணவு அருந்திய சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்.. 3 பேர் பலி..

காப்பக நிர்வாக செயல்பாடுகள் அலட்சியமாக இருந்துள்ளது. அதுமட்டுமின்றி நிர்வாகத்தில் அலட்சியத்தாலும் மெத்தனபோக்கினாலும் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட காப்பகம் மூடப்படும். அத்துடன் மூன்று சிறுவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கப்படும்.மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீதும் காப்பக நிர்வாகிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.  மேலும் இங்குள்ள சிறார்கள் அனைவரும் உடல் நலம் சரியானவுடன் , அரசு காப்பகத்திற்கு மாற்றப்படுவர் என்று கூறினார்.
 

06:12கர்நாடக அரசின் உத்தரவுக்கு எதிராக கொதித்தெழுந்த விவசாயிகள்! காவிரி நீரைக் காக்க தீவிர போராட்டம்!
02:09த்ரிஷாவை தவறாக பேசுவதா?" – கொதித்தெழுந்த ரசிகர்கள்! மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய கண்டன போஸ்டர்கள்!
02:35கன்னியாகுமரி திரிவேணி சங்கமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திரண்ட பக்தர்கள் !
01:56பேரவையில் சுவாரஸ்யம்: சபாநாயகர் பாடிய வாழ்த்துப் பாடல்... புன்னகையுடன் முதல்வர் வரவேற்பு!
02:14தென்னிந்தியாவில் இருந்து ஒரு பிரதம மந்திரி உருவாக்க பட வேண்டும் ! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச்சு
09:48இராணுவ சீருடை தரும் கெத்தே தனி ! - இளைஞர்களை அதிர வைத்த அண்ணாமலையின் மாஸ் ஸ்பீச் !
07:56Gen Z இளைஞர்களுக்கு அண்ணாமலை கொடுத்த அட்வைஸ் ! - கோவையில் அனல் பறந்த மேடை பேச்சு !
08:40எடப்பாடியை வறுத்தெடுத்த சி.வி. சண்முகம் ! - ஆவேச பேச்சு !
07:31எடப்பாடி பழனிசாமியால் இதுவரை அதிமுகவிற்கு தோல்வி மட்டும் தான் ..! அதிமுக உறுப்பினர் C.V. சண்முகம்
05:435 வருஷ ஆட்சியை 3 மாச ஆட்சியோட ஒப்பிடுறீங்களா? DMK-வை வெளுத்து வாங்கிய ஆதவ் அர்ஜுனா!