ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் கோடநாடு இல்ல மர்ம மரணங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரித்தனர்.கொலை வழக்கு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தனது சொல்போனை இதுவரை ஒப்படைக்காதது குறித்து உயர் அதிகாரியாக இருந்த வீரபெருமாளிடம் விசாரணை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விசாரணையின் போது கோடநாடு பங்களாவில் கொள்ளையடிக்க கனகராஜ் திட்டம் தீட்டியது உண்மை தானா.? கோடநாடு இல்ல மர்ம மரணங்கள் தொடர்பாகவும் சிபிசிஐடி போலீசார் விசாரித்ததாக கூறப்படுகிறது.