Velmurugan s | Published: Mar 27, 2025, 2:01 PM IST
சட்டமன்றத் தேர்தலுக்குள் ஒருங்கிணைந்த அதிமுக உருவாகுவதற்கான வாய்ப்புகள் கணிந்து வருவதாக பார்க்கப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளை தொடங்கவும் பாஜக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏனென்றால் திமுக கூட்டணியை எதிர்க்க பிரம்மாண்ட கூட்டணி அமைத்தால் மட்டுமே சட்டமன்றத் தேர்தலில் சவால் அளிக்க முடியும். அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ்-ஐ அதிமுகவில் சேர்க்கவில்லை என்றாலும், அவர் தேசிய ஜனநாயக கூட்டணியின் அங்கமாக இருப்பார் என்று பார்க்கப்படுகிறது. ஏனென்றால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுக்கு தென் மாவட்டங்களில் கடுமையாக சரிவு ஏற்பட்டது. அதனை பாஜக மற்றும் ஓபிஎஸ் மூலம் சரிகட்ட முடியும்.