vuukle one pixel image

விருதுநகரில் திடீரென பால் போல் பொங்கி சாலையில் ஓடிய தண்ணீர்

Velmurugan s  | Published: Oct 25, 2023, 12:32 PM IST

விருதுநகர் மாவட்டம் சிவகாசி ரயில் நிலையம் செல்லும் சாலையில் சாலை ஓரத்தில் திடீரென ஊற்று ஏற்பட்டு அதில் தண்ணீர் வெள்ளை நிறமாக வந்துள்ளது. இதனை அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்துள்ளனர்.

உடனடியாக மாநகராட்சி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களும் வந்து அந்த தண்ணீரை பாட்டிலில் எடுத்து ஆய்வு செய்ய அனுப்பி வைத்தனர். மேலும் அந்தப் பகுதியில் சென்ற பொதுமக்கள் சிலர் அந்த தண்ணீரை அருகிப் பார்த்துள்ளார்கள். அதில் உப்பு தண்ணீர் இல்லை என்றும் பால் போன்று வெள்ளை நிறத்தில் வருவதால் அதை ஏராளமான பொதுமக்கள் தலையில் தெளித்தும் சென்றனர். இதனால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.