vuukle one pixel image

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி, 10 பேர் படுகாயம்

Velmurugan s  | Updated: Nov 14, 2023, 9:43 PM IST

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே திருவங்கடத்திலிருந்து சிவகாசியை நோக்கி அரசு பேருந்து ஒன்று பொதுமக்களை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது அலமேலு மங்கைபுரம் அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே உள்ள பள்ளத்தில் அரசு பேருந்து கவிழ்ந்தது.

இந்த விபத்தில் செவல்பட்டி பகுதியைச் சேர்ந்த முத்துமாரி (வயது 23) என்ற இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கல்லூரி மாணவிகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

விபத்து தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.