உலகின் 7 அதிசயத்தை கோழி முட்டையில் கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவி

உலகின் 7 அதிசயத்தை கோழி முட்டையில் கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவி

Published : Mar 06, 2024, 10:21 AM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே முட்டையில் உலக அதிசயங்களை ஓவியமாக வரைந்து கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த அரசு பள்ளி மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளத்தைச் சேர்ந்த பாண்டியராஜ், உமா மகேஷ்வரி என்ற பட்டாசு தொழிலாளர் தம்பதியின் மகள் மாலதி (வயது 16). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு பயின்று வருகிறார். சமீப நாட்களாக ஓவியத்தில் அதிக ஆர்வம் கொண்ட மாணவி பல்வேறு ஓவிய போட்டிகளில் தொடர் வெற்றிகளை பெற்றுள்ளார்.

இதன் அடுத்தகட்ட முயற்சியாக கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடிக்கும் வகையில் உலக அதிசயங்களான தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர், சிச்சென் இட்சா, பெட்ரா, மச்சு பிச்சு, மீட்பாரான கிறிஸ்து சிலை, கோலோசியம் ஆகிய 7 அதிசயங்களை முட்டையில் 48 நிமிடங்களில் தத்ரூபமாக ஓவியம் வரைந்து கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். ஓவிய ஆசியர் கூட இல்லாத அரசு பள்ளியில் பயிலும் மாணவி மாலதியின் தனி திறனை பலரும் பாராட்டி வருகின்றனர்.

ராதிகா சரத்குமார் பிரச்சாரத்தின் போது மூதாட்டி செய்த செயல்.. வைரலாகும் வீடியோ!
01:35விருதுநகர்.. முன்னறிவிப்பு இல்லாமல் நடைபெற்ற தார் சாலை அமைக்கும் பணி - போக்குவரத்து பாதிப்பால் மக்கள் அவதி!
05:53உலகின் 7 அதிசயத்தை கோழி முட்டையில் கொண்டு வந்த அரசுப்பள்ளி மாணவி
01:38முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா; அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
01:30வெள்ளத்தின்போது ஏற்பட்ட பிரசவ வலி; கர்ப்பிணியை பத்திரமாக மீட்ட பொதுமக்கள்
03:51வெள்ளத்தில் சிக்கி விடிய விடிய தவித்த பக்தர்கள்; உயிரை பணயம் வைத்து மீட்ட வனத்துறையினர்
02:25சோமவாரத்தை முன்னிட்டு இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் 1008 சங்காபிஷேகம்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
01:07கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து கவிழ்ந்து கல்லூரி மாணவி பலி, 10 பேர் படுகாயம்
00:37விருதுநகரில் திடீரென பால் போல் பொங்கி சாலையில் ஓடிய தண்ணீர்