பெரியகோவில் சித்திரை திருவிழாவில் கும்மியடித்து மகிழ்ந்த மாநகராட்சி மேயர், ஆணையர்

May 2, 2023, 3:48 PM IST

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது, அதனைத் தொடர்ந்து தினமும் பல்வேறு அலங்காரத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெற்றது. 

இவ்விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக தேரோட்டம் திங்கள் கிழமை நடைபெற்றது, முன்னதாக முதல் நாள் ஞாயிறு அன்று கடந்த 30ந் தேதி தேரடி பகுதியில் மாநகராட்சி மேயர் ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், கவுன்சிலர் மேத்தா ஆகியோர் அங்கு சென்றனர், அப்போது சித்திரை திருவிழாவை கொண்டாடும் வகையில் தேரடியில் மகளிர் உற்சாகமாக கோலாட்டம் ஆடிக் கொண்டிருந்தனர். 

அப்போது மேயர் ராமநாதன், ஆணையர் சரவணக்குமார், கவுன்சிலர் மேத்தா, ஆகியோர் கோலாட்ட குச்சியுடன், தாங்களும் உற்சாகமாக கோலாட்டம் ஆடி கும்மியடித்து ஆடினர். இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர், இதனால் அந்த பகுதி கலகலப்பாக காணப்பட்டது, இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.