தஞ்சையில் விபத்தில் சிக்கிய பள்ளி குழந்தைகள் உள்பட 4 பேரை மீட்டு உதவிய துணைமேயர்

தஞ்சையில் விபத்தில் சிக்கிய பள்ளி குழந்தைகள் உள்பட 4 பேரை மீட்டு உதவிய துணைமேயர்

Published : Nov 08, 2023, 12:56 AM IST

தஞ்சையில் விபத்தில் சிக்கி ரத்த காயத்துடன் தந்தையுடன் வலியால் துடித்த இரண்டு  பள்ளி சிறார்களை  மீட்டு தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த, தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர். அஞ்சுகம் பூபதி.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் விபத்தில் சிக்கி  ரத்த காயத்துடன் பள்ளி சீருடையில் இரண்டு சிறார்களும். இரண்டு ஆண்களும் சாலையில் கிடந்தனர். சிறார்களின் அலறல் சத்தம் கேட்டு சாலையில் இடது திசையில் காரில் வீட்டுக்கு சென்ற தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர்.அஞ்சுகம் பூபதி காரை திருப்பி வந்து காயத்துடன் வலியால் துடித்து கொண்டு இருந்த இரண்டு பள்ளி சிறார்களையும், அவரது தந்தையையும் மீட்டு அவர்களை தனது காரில் ஏற்றி  பயப்படாமல் போங்கள் என கூறி தனது உதவியாளரையும் துணைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

மேலும், விபத்தில் சிக்கிய மற்றொருவரை 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு பின்னர் துணை மேயர். டாக்டர்.அஞ்சுகம் பூபதி வீட்டுக்கு சென்றார். முன்னாள் சென்ற ஜுபிடர் இரு சக்கர வாகனம் மீது. பின்னால வந்த ஆக்டிவா வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல் தெரிந்தது.

01:33Shocking Video: தஞ்சையில் மரண பீதியை ஏற்படுத்திய தனயார் பேருந்து ஓட்டுநர்; உயிர் பயத்தில் அலறிய பயணிகள்
02:46DSP ரேங்கில் இருந்த "சீசர்" என்ற மோப்பநாய்.. உடல் நலக்குறைவால் இறப்பு - 12 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்!
02:20Viral Video in Tanjore: சில்லறை இல்லை; கர்ப்பிணியை வலுக்கட்டாயமாக பாதி வழியில் இறக்கிவிட்ட பேருந்து நடத்துநர்
00:57மதுவை கீழே ஊற்றி BJP நூதன ஆர்ப்பாட்டம்.. கட்டிங் கேட்டு அலப்பறை செய்த "குடிமகன்" - இறுதியில் வென்றது யார்?
02:17Actor KPY Bala : எளியவர்களை தேடிச்செல்வேன்.. என்னால் முடிந்தவரை அவர்களுக்கு உதவுவேன் - KPY பாலா நெகிழ்ச்சி!
01:31Papanasam : பாபநாசம் அருகே உள்ள அருள்மிகு வடபத்திர காளியம்மன் ஆலயம் - கோலாகலமாக நடந்த திருநடன திருவிழா!
04:38கொங்கு கும்மியாட்டத்திற்கு போட்டியாக டெல்டாவில் அரங்கேறிய கோலாட்டம்; சினிமா பாடல்களுக்கு நடனமாடி அசத்தல்
01:08உலக புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவில் அகழியில் தீ விபத்து; நீண்ட நேரம் போராடி தீயை அணைத்த அதிகாரிகள்
01:39கும்பகோணத்தில் ரூ.50 ஆயிரம் நன்கொடை கேட்டு விசிகவினர் அடாவடி; கடை உரிமையாளர் மீது தாக்குதல்
03:45நில அளவையர்களுக்கு பாதுகாப்பு இல்லை; தஞ்சை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 4 மாவட்ட அளவையர்கள்
Read more