அது எப்படி? வேப்ப மரத்தின் உச்சியில் இருந்து வளரும் அரசமரம்; பக்தர்கள் பரவசம்

Sep 29, 2023, 10:26 AM IST

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பிடாரி குளம் அருகே  ஸ்ரீ ஜலச்சந்திர மாரியம்மன்  கோயில் உள்ளது. இந்தக் கோயில் முன்புறம் மலை வேம்பு மரம்  உள்ளது. இதை அப்பகுதியில் உள்ள பொதுமக்களும், பக்தர்களும் விளக்கேற்றி வழிபடுவது வழக்கம். இந்த  வேப்ப மரத்தின் மேல் பகுதியில் அரச மரமும் வளர்வதைக் கண்டு அந்த பகுதியில் உள்ள மக்கள் ஆச்சரியம் அடைந்தனர். 

பொதுவாக ஒரு மரமும், இன்னொரு மரமும் பூமியில் இருந்து ஒன்றாக வளர்ந்து வருவது வழக்கம். ஆனால் இந்த வேப்ப மரத்தின் மேல் பகுதியில் எந்த வகையிலும் பூமிக்கு தொடர்பு இல்லாமல்  பிள்ளையாருக்கு விருச்சிகமாக விளங்கும் அரசமரம்  வேப்ப மரத்தில்  முளைத்து வளர்ந்து வருகிறது. வேப்ப மரத்தின் மேல் அரசமரம் வளர்வதை  அந்த பகுதியில் உள்ள மக்களும், பக்தர்களும் வியப்புடன், ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.