script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

சேலம் ரயில் நிலையம் முன்பாக சுயமரியாதை திருமணம் செய்துகொண்ட காதல் ஜோடி

Oct 31, 2023, 8:57 PM IST

சேலம் மாவட்டம் அல்லிக்குட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவரும் தர்மபுரி மாவட்டம் எர்ணஹள்ளி பகுதியைச் சேர்ந்த வைஷாலி ஆகிய இருவரும் கல்லூரியில் படிக்கும் காலம் முதலே காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சாதி மறுப்பு சுயமரியாதை திருமணம் செய்து கொள்வதாக முடிவு எடுத்து உள்ளனர். 

இவர்கள் இருவரும் தந்தை பெரியார் காரல் மார்க்ஸ் ஆகியோரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டதால் தங்களது திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்திக் கொள்ள விரும்பி இன்று சேலம் டவுன் ரயில் நிலையம் முன்பு பாரதியார் சிலை எதிரே சாதி மறுப்பு சுயமரியாதை திருமணத்தை செய்து கொண்டனர். 

முன்னதாக மணமக்கள் இருவரும் பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்தும், காரல் மார்க்ஸ் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினர். இந்த திருமணத்தை தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் நடத்தப்பட்டது. மாலை மாற்றிக்கொண்ட காதல் ஜோடி ராஜ்கமல், வைஷாலி பாரதியார் சிலை முன்பு வாழ்க்கை ஒப்பந்த உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர். பின்னர் இந்த சுயமரியாதை திருமணத்தில் கலந்து கொண்டவர்களுக்கு இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.Salem, Love Marriage, Periyar, Salem Railway Station, Love Marriage, சேலம், காதல் திருமணம், சுயமரியாதை திருமணம