vuukle one pixel image

Watch : மாணவிகளுக்கு ஈவ்டீசிங் தொல்லை! - "நானும் ரவுடி தான்" என வசனம் பேசிய நபர் கைது!

Dinesh TG  | Published: Apr 3, 2023, 1:06 PM IST

சேலம் மாநகர் அரசு கலைக் கல்லூரி மாணவ மாணவிகள் அந்த கல்லூரி அருகே உள்ள மாவட்ட மைய நூலகத்திற்கு சென்று படித்து வருவது வழக்கம். அதே போல் அந்த நூலகத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட புத்தக வாசிப்பாளர்கள் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மாவட்ட நூலக வளாகத்தில் மாணவிகள் சிலர் நின்றுக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு நபர் அங்கிருந்த மாணவிகளை ஈவ்டீசிங் செய்ததாக கூறப்படுகிறது. மாணவிகளும் யாரென்று தெரியாததால் சம்பந்தப்பட்ட நபரிடம் யாரை அழைத்தீர்கள் என கேட்டுள்ளனர். அவர் உங்களை தான் என குடி போதையில் கூறியுள்ளார்.

இதனால் மாணவிகளுக்கும் அந்நபருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே போலீஸிடம் கூறப்போவதாக அந்த மாணவிகள் கூறியபோது, நான் யாருன்னு தெரியுமா என்மேல எத்தனை கேஸ் இருக்குது தெரியுமா, உங்களால என்ன பண்ணிட முடியும். நானே பெரிய ரெளடி என ஏடாகூடமாக பேசியுள்ளார். பின்னர் மாணவிகள் பிரச்னை வேண்டாம் என கலைந்து சென்றனர்.

இதனிடையே இதுகுறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, காவல்துறையினர் சம்பந்தப்பட்ட நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர்.