சேலத்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு; பயணிகளுடன் தலைகீழாக கவிழ்ந்த தனியார் பேருந்து

சேலத்தில் ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு; பயணிகளுடன் தலைகீழாக கவிழ்ந்த தனியார் பேருந்து

Published : Oct 28, 2023, 03:19 PM IST

சேலத்தில் தனியார் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்ட நிலையில் பேருந்து கவிழ்ந்து 10 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வாழப்பாடி வழியாக சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்து சுங்கச்சாவடி அருகே வந்த  பொழுது ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலை தடுப்பில் மோதி தலை கீழாகக் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து விபத்தில் காயமடைந்த பயணிகள் மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்து தொடர்பாக வாழப்பாடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து காரணமாக சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நடிகர் சூரி பிறந்த நாள் விழா; இரத்த தானத்திற்காக மருத்துவமனையில் குவிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள்
00:51Shocking Video: சிலிண்டரை அலட்சியமாக கையாண்ட பணியாளர்கள்? சிலிண்டர் வெடித்து இருவர் படுகாயம்
00:50 அதிமுக பிரமுகர் கொடூர கொலை! உடலை வாங்க மறுப்பு! சேலம் மருத்துவமனையை கண்ட்ரோலில் எடுத்த போலீஸ்! திக். திக்..!
01:00Illicit Liquor: பால் பாக்கெட்டை போல் வீடு வீடாக டோர் டெலிவரி செய்யப்படும் சாராய பாக்கெட்
Vote Counting | சேலம் தொகுதியில் வாக்கு எண்ணிக்கைக்கு தொடங்கியது!
தமிழ்நாடு மின்சார வாரிய பணியாளர்களுக்கு வரமாக வந்த புதிய கருவி; புதிய நம்பிக்கையில் தொழிலாளர்கள்
3333:20NDA கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்; அவசரத்தில் கூட்டணியை மாற்றி சொன்ன திமுக முதன்மை செயலாளர்!!
01:06மது போதையில் 4 வழிச்சாலையில் ரகளை; போதை ஆசாமியால் வாகன ஓட்டிகள் அவதி
00:56ஒவ்வொரு ஆண்டும் முதல் மரியாதை பெற்று வந்த கோவில் காளை; ஊர் கூடி அஞ்சலி செலுத்திய மக்கள்
01:17சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் மீதான பாலியல் புகார்; துணைவேந்தர், பதிவாளர் நீதிமன்றத்தில் ஆஜர்
Read more